- Home
- Cinema
- corona Kumar movie : கொரோனா குமார் படத்தின் மாஸ் அப்டேட்... புஷ்பா வில்லனை புரட்டி எடுக்க தயாராகும் சிம்பு
corona Kumar movie : கொரோனா குமார் படத்தின் மாஸ் அப்டேட்... புஷ்பா வில்லனை புரட்டி எடுக்க தயாராகும் சிம்பு
corona Kumar movie update : வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல ஆகிய படங்களின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. விரைவில் நடிகர் சிம்பு கொரோனா குமார் படத்தில் நடிக்க உள்ளார்.

டி.ராஜேந்தரின் மகனான சிம்பு, சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். தன் தந்தையை போலவே நடிப்பு, இசை, இயக்கம், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வரும் சிம்பு, தனது கடின உழைப்பால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உயர்ந்துள்ளார்.
உடல் எடை கூடியதால் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்காமல் திண்டாடி வந்த சிம்புவுக்கு, கடந்தாண்டு வெளியான மாநாடு திரைப்படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அவர் உடல் எடையை குறைத்தது மட்டுமில்லாமல், தற்போது தமிழ் சினிமாவில் அவரது மார்க்கெட் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
மாநாடு படத்தின் வெற்றியால், இவர் அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’, ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்கும் ‘பத்து தல’, கோகுல் இயக்கத்தில் நடிக்கும் ‘கொரோனா குமார்’ போன்ற படங்களுக்கு கடும் டிமாண்ட் நிலவி வருகிறது.
இதில் வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல ஆகிய படங்களின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. விரைவில் அவர் கொரோனா குமார் படத்தில் நடிக்க உள்ளார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் தொடர்ச்சியாக தயாராக உள்ள இப்படத்தை கோகுல் இயக்க உள்ளார்.
இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் வில்லன் குறித்த அப்டேட்டும் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், கொரோனா குமார் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் பகத் பாசில் அண்மையில் வெளியான புஷ்பா படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... வாவ்.. செம்ம ஸ்டைலிஷா இருக்காரே! புதிய கெட்-அப்பில் அதகளப்படுத்தும் அஜித் - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்