MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Visha Yoga Alert
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Today's Rasi Palan
FD Vs RD Rate Calculator
8th Pay Commission
Vakra Maha Yoga
Kitchen Sink Cleaning Tips
Train Lower Berth
8th Pay Commission Pension Revision Demands
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • Karuppu Controversy: கருப்பு பட டைரக்டர் ஆர்.ஜே.பாலாஜியை வறுத்தெடுக்கும் சூர்யா ஃபேன்ஸ்.! இதுதான் காரணமா?

Karuppu Controversy: கருப்பு பட டைரக்டர் ஆர்.ஜே.பாலாஜியை வறுத்தெடுக்கும் சூர்யா ஃபேன்ஸ்.! இதுதான் காரணமா?

Suriya Fans Angry at RJ Balaji:  'கருப்பு' திரைப்பட இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் சில பேச்சுகளும், செயல்களும் சூர்யா ரசிகர்களைக் கோபப்படுத்தியுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் அவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

2 Min read
Author : Ramprasath S
Published : Jun 05 2026, 06:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Suriya Fans Angry at RJ Balaji
Image Credit : X/Twitter

Suriya Fans Angry at RJ Balaji

சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பி வருகிறது. இந்தப் படம் ஏற்கனவே 310 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, சூர்யாவின் சினிமா கரியரில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்துள்ளது. இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தும், சூர்யா ரசிகர்கள் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
சர்ச்சையைத் தூண்டிய அந்த சந்திப்பு
Image Credit : Dream Warrior Pictures

சர்ச்சையைத் தூண்டிய அந்த சந்திப்பு

படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, முதல்வர் விஜய்யை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு போட்டோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்த பாலாஜி, "அவரால்தான் 'கருப்பு' படம் தொடங்கியது. இந்த சந்திப்பை நம்பவே முடியவில்லை" என்று கேப்ஷன் போட்டிருந்தார். பாலாஜியின் இந்த வார்த்தைகள்தான் சூர்யா ரசிகர்களின் கோபத்துக்குக் காரணம்.

Related Articles

Related image1
Blast vs Karuppu Box Office Collection : கருப்பனின் வசூல் வேட்டைக்கு வேட்டு வைத்ததா பிளாஸ்ட்?
Related image2
Karuppu : துணிவு, பீஸ்ட் பட லைஃப் டைம் வசூல் சாதனைகளை சல்லி சல்லியாய் நொறுக்கிய கருப்பு
36
ஆர்.ஜே. பாலாஜியின் சர்ச்சை பேச்சு
Image Credit : instagram

ஆர்.ஜே. பாலாஜியின் சர்ச்சை பேச்சு

ஆர்.ஜே. பாலாஜி இதற்கு முன்பு ஒரு மேடையில், "இந்தக் கதையை நான் முதலில் விஜய்யிடம் தான் சொன்னேன். அது அவருடைய கடைசி படமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் ஹெச். வினோத் படத்திற்கு ஓகே சொல்லிவிட்டார். அதன்பிறகுதான் நான் சூர்யாவிடம் இந்தக் கதையைச் சொன்னேன்" என்று வெளிப்படையாகப் பேசியிருந்தார்.

46
ஆர். ஜே பாலஜியை விமர்சிக்கும் சூர்யா ரசிகர்கள்
Image Credit : Instagram

ஆர். ஜே பாலஜியை விமர்சிக்கும் சூர்யா ரசிகர்கள்

இப்போது படம் இவ்வளவு பெரிய ஹிட் ஆனதும், படத்தின் வெற்றிக்கான கிரெடிட்டை சூர்யாவுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, விஜய்யைச் சந்தித்து 'அவரால்தான் படம் தொடங்கியது' என்று பாலாஜி சொல்வது சூர்யா ரசிகர்களை எரிச்சலடைய வைத்துள்ளது. "எங்க ஹீரோ இந்த படத்துக்கு செகண்ட் சாய்ஸா இருந்தாக்கூட பரவாயில்லை, ஆனா வெற்றியின் கிரெடிட்டைக் கொடுக்கும்போது இப்படி செய்வது சரியில்லை" என்று ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

56
பிகில் பட சாதனையை முறியடித்த கருப்பு
Image Credit : Asianet News

பிகில் பட சாதனையை முறியடித்த கருப்பு

சூர்யா ரசிகர்கள் கோபப்பட இன்னொரு முக்கிய காரணம் பாக்ஸ் ஆபிஸ் கணக்கு. தற்போதைய அறிக்கைகளின்படி, 'கருப்பு' திரைப்படம் விஜய் நடித்த 'பிகில்' (300 கோடி) மற்றும் 'வாரிசு' (310 கோடி) படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. விஜய் சாதனையை முறியடித்த ஒரு படத்தை வைத்துக்கொண்டு, இயக்குநர் மீண்டும் விஜய்யையே புகழ்வது ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. "சூர்யா இல்லையென்றால் இந்தப் படம் இவ்வளவு வசூல் செய்திருக்காது" என்பது ரசிகர்களின் வாதம்.

66
நடிகர் சூரியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு
Image Credit : Asianet News

நடிகர் சூரியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

இந்த சர்ச்சைத் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கும்போதே, நடிகர் சூர்யா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் போட்டுள்ளார். "அன்புடன் முன்னேறுங்கள். பணிவாகவும் தாராளமாகவும் இருங்கள்" என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் சண்டையிடுவதை விரும்பாத சூர்யா, மறைமுகமாக அமைதியாக இருக்கச் சொல்லி அறிவுரை வழங்கியுள்ளார். இது சூர்யாவின் கண்ணியத்தைக் காட்டுவதாக ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பேனரில் வெளியான இந்தப் படம், நீதித்துறையில் உள்ள ஊழலைப் பற்றி பேசுகிறது. என்னதான் சர்ச்சைகள் இருந்தாலும், 'கருப்பு' திரைப்படம் தற்போது கோலிவுட்டில் ஒரு சுனாமியாக மாறியிருப்பது மட்டும் உண்மை!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா
சூர்யா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
சாமி கும்பிடும் இடத்தில் கவர்ச்சி ஆடையா? திஷா பதானியை சரமாரியாக வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
Recommended image2
Cinema : AI, சைபர் கிரைம், வைரஸ் என எதிர்காலத்தை முன்கூட்டியே பேசிய 8 தமிழ் படங்கள்!
Recommended image3
Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் நாக் அவுட் டாஸ்க்... ஆனந்தி உடன் அடிதடியில் இறங்கிய லட்சுமி பிரியாவால் பரபரப்பு
Related Stories
Recommended image1
Blast vs Karuppu Box Office Collection : கருப்பனின் வசூல் வேட்டைக்கு வேட்டு வைத்ததா பிளாஸ்ட்?
Recommended image2
Karuppu : துணிவு, பீஸ்ட் பட லைஃப் டைம் வசூல் சாதனைகளை சல்லி சல்லியாய் நொறுக்கிய கருப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved