- Home
- Cinema
- இவருக்கு 50 வயசுன்னு சொன்னா யார் நம்புவா? யங் லுக்கில் பிறந்தநாள் கொண்டாடிய சூர்யா - வைரலாகும் போட்டோ
இவருக்கு 50 வயசுன்னு சொன்னா யார் நம்புவா? யங் லுக்கில் பிறந்தநாள் கொண்டாடிய சூர்யா - வைரலாகும் போட்டோ
நடிகர் சூர்யா தன்னுடைய 50வது பிறந்தநாளை மனைவி ஜோதிகா உடன் கொண்டாடி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Suriya Birthday Celebration
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் சினிமாவில் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இவருக்கு தற்போது 50 வயது ஆகிறது. இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் சூர்யா. அவருக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஏராளமான பிரபலங்களும் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. அவர் தன்னுடைய மனைவி ஜோதிகா உடன் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். தலையில் 50 என்கிற நம்பர் உடன் கூடிய தொப்பி அணிந்திருக்கும் சூர்யாவை கட்டியணைத்தபடி போஸ் கொடுத்துள்ளார் ஜோதிகா. அந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது.
சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்
நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடித்த படங்களின் அப்டேட்டும் வெளியான வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் கருப்பு திரைப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு உள்ளன. அதில் மீசையை முறுக்கிக் கொண்டு செம கெத்தாக காட்சியளிக்கிறார் சூர்யா. அப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார். அப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். கருப்பு திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.
ரிலீசுக்கு ரெடியாகும் கருப்பு
கருப்பு திரைப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார் சூர்யா. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்திற்கு விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார் சூர்யா. அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் எதுவும் பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால் கருப்பு படத்தை மலைபோல் நம்பி உள்ளார் சூர்யா.
சூர்யா கைவசம் உள்ள படங்கள்
கருப்பு படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தன்னுடைய 46வது படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். அதில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார். அப்படத்தை சித்தாரா நிறுவனம் தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் அப்படத்திற்கு இசையமைக்கிறார். இதுதவிர வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசல் படமும் நடிகர் சூர்யா கைவசம் உள்ளது. மேலும் லோகேஷ் கனகராஜின் ரோலெக்ஸ், விக்ரம் 2 போன்ற திரைப்படங்களும் சூர்யாவின் லைன் அப்பில் உள்ளன. இதனால் அடுத்த ஆண்டு சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கிறது.