- Home
- Cinema
- சூப்பர் ஸ்டார் படங்களின் ஆஸ்தான தயாரிப்பாளர் காலமானார்.! தலைவரின் 'பணக்காரன்' முதல் 'பாட்ஷா' வரை தந்த ஜாம்பவான் மறைவு.!
சூப்பர் ஸ்டார் படங்களின் ஆஸ்தான தயாரிப்பாளர் காலமானார்.! தலைவரின் 'பணக்காரன்' முதல் 'பாட்ஷா' வரை தந்த ஜாம்பவான் மறைவு.!
சத்யா மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான வீ. தமிழ் அழகன் காலமானார். ரஜினிகாந்தின் 'பாட்ஷா', 'மூன்று முகம்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த இவர், வயது மூப்பு காரணமாக தனது 70வது வயதில் மறைந்தார்.

ரஜினி தயாரிப்பாளர் மறைவு
தமிழ்த் திரையுலகின் பொற்கால வரலாற்றில் நீங்காத இடம்பெற்ற சத்யா மூவீஸ் நிறுவனத்தின் தூண்களில் ஒருவரும், பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான வீ. தமிழ் அழகன் அவர்கள் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த கோலிவுட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரஜினி ரசிகர்களின் அன்பைப் பெற்றவர்
தலைவரின் ஆஸ்தான தயாரிப்பாளர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல் திரைப்படங்களைத் தயாரித்த பெருமை வீ. தமிழ் அழகன் அவர்களுக்கு உண்டு. ரஜினிகாந்திற்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்த 'மூன்று முகம்', வசூல் சாதனை படைத்த 'பணக்காரன்' மற்றும் தமிழ் சினிமாவின் இமாலய வெற்றியான 'பாட்ஷா' போன்ற படங்களை உருவாக்கி, ரஜினி ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் இவர். திரையுலக ஜாம்பவான் இராம. வீரப்பன் அவர்களின் மூத்த மகனான இவர், தன் தந்தையின் வழியில் தரமான திரைப்படங்களைத் தயாரிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார்.
இயக்கனராகவும் சாதித்தார் வீ. தமிழ் அழகன்
இயக்குநராகவும் முத்திரை தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், படைப்பாளியாகவும் ஜொலித்தவர் வீ. தமிழ் அழகன். 'மந்திரப் புன்னகை', 'நிலாப் பெண்ணே' ஆகிய திரைப்படங்களை இயக்கி, இயக்குநராகவும் தனது திறமையை நிரூபித்தார். ரஜினிகாந்த் மட்டுமின்றி, உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'காக்கி சட்டை', விஜயகாந்த் நடித்த 'புதிய வானம்' மற்றும் 'ராணுவ வீரன்' எனப் பல முன்னணி நட்சத்திரங்களின் வெற்றிப் படங்களுக்குப் பின்னால் இவரது உழைப்பு இருந்தது.
சிவலோக பதவி அடைந்தார் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பிப்ரவரி 14 காலமான அவருக்கு வயது 70. இவரது மறைவு குறித்து சத்யா மூவீஸ் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்ரவரி 16-ம் தேதி மாலை 5 மணியளவில் தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீ. தமிழ் அழகன் அவர்களின் மறைவுக்குத் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு மாபெரும் தயாரிப்பு நிறுவனத்தின் வாரிசாகவும், வெற்றிகரமான படைப்பாளியாகவும் விளங்கிய அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

