MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • தவறான முடிவெடுத்த மயில்.! மீனாவுக்கு தெரிய வரும் அதிர்ச்சி உண்மை.! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

தவறான முடிவெடுத்த மயில்.! மீனாவுக்கு தெரிய வரும் அதிர்ச்சி உண்மை.! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 15 2026, 11:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian Stores 2 Serial Today Episode
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial Today Episode

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் பாகம் 2. இந்த தொடருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். தற்போது சரவணன் மயிலிடமிருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு சென்றிருக்கிறார். செந்தில் மீனா இருவரும் தனிக் குடித்தனம் செல்கின்றனர். கதிர் மற்றும் ராஜி இருவரும் தங்கள் வீட்டில் நடப்பது பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஜாலியாக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சரவணன் - தங்கமயில் விவாகரத்து
Image Credit : jiohotstar

சரவணன் - தங்கமயில் விவாகரத்து

தற்போது கதையின் மையப்புள்ளியாக சரவணன் மற்றும் தங்கமயில் விவாகரத்து விவகாரம் உள்ளது. விவாகரத்து கோரி சரவணன் உறுதியாக இருக்கும் நிலையில், தங்கமயில் நீதிமன்றத்தில் புகுந்த வீட்டில் அனைவரும் கொடுமைப்படுத்தியதாகவும், இருப்பினும் சரவணனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறுகிறார். தங்கமயிலின் இந்த பொய்யான குற்றச்சாட்டை கேட்டு அதிர்ச்சி அடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம், இனி சரவணன் தங்கமயிலை சேரவே விடக்கூடாது என்று முடிவெடுக்கின்றனர்.

35
மீண்டும் துளிர்க்கும் அஞ்சலி சரவணன் காதல்!
Image Credit : jiohotstar

மீண்டும் துளிர்க்கும் அஞ்சலி சரவணன் காதல்!

மறுபுறம் சரவணன் வாழ்வில் அவரது முன்னாள் காதலி அஞ்சலி மீண்டும் நுழைந்துள்ளார். அஞ்சலிக்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து ஆகியுள்ள நிலையில் சரவணனிடம் அஞ்சலி மீண்டும் பேசத் தொடங்கியுள்ளார். இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி வருகின்றனர். நாம் அப்போதே திருமணம் செய்து இருக்கலாம் என்று அஞ்சலி கூற, தான் செய்த தவறுகளை எல்லாம் நினைத்து சரவணன் வருத்தப்படுகிறார். மேலும் சரவணனுக்கு தங்கமயில் மீதான கோபம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

45
தங்கமயிலுக்கு ஏற்படும் சங்கடம்
Image Credit : Jio Hotstar

தங்கமயிலுக்கு ஏற்படும் சங்கடம்

இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் தங்க மயிலின் தாயார் அவரை மிகவும் மோசமாக நடத்துகிறார். அவரை வீட்டை விட்டு வெளியேறுமாறும், ‘எங்காவது சென்று செத்து தொலை’ என்று கடுமையான வார்த்தைகளை கூறுகிறார். இதனால் மனமுடைந்த தங்கமயில் நேராக சரவணனைத் தேடி செல்கிறார். ஆனால் சரவணனும், தங்க மயிலை திட்டி அனுப்பி விடுகிறார். “எதை பேசுவதாக இருந்தாலும் கோர்ட்டில் வந்து பேசு, இனிமேல் நீ என் வாழ்க்கையிலேயே வந்து விடாதே” என்று சொல்லி சரவணன் அவரை அனுப்பி விடுகிறார்.

55
தவறான முடிவெடுக்கும் தங்க மயில்
Image Credit : Jio Hotstar

தவறான முடிவெடுக்கும் தங்க மயில்

இதனால் மனமுடையும் தங்கமயில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்வதற்காக முடிவெடுக்கிறார். அவர் அழுது கொண்டே செல்வதை பார்த்து விடும் மீனா, அவரை பின்தொடர்ந்து செல்கிறார். மீனா தங்கமயிலை காப்பாற்றுவாரா அடுத்து என்ன நடக்கப் போகிறது என்கிற பரபரப்பு எழுந்துள்ளது.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபலம்... அவருக்கு பதில் இவரா?
Recommended image2
Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் அதிரடி ட்விஸ்ட்... அக்‌ஷிதா – அவினாஷுக்கு செக் வைத்த அஸ்மிதா – பிரித்வி!
Recommended image3
Sun TV vs Vijay TV : சன் டிவியின் ரெக்கார்டை சல்லி சல்லியாய் உடைக்கும் விஜய் டிவி... இனி இந்த சீரியல் தான் நம்பர் 1
Related Stories
Recommended image1
Karthigai Deepam Highlights: தங்கச்சிக்கு அட்வைஸ் பண்ணிய ரோகிணி - கார்த்திக் கொடுக்கப்போகும் லவ்வர்ஸ் டே சர்ப்ரைஸ்!
Recommended image2
சரவணன் ஷாக்! நிஜ கணவருடன் ஊர் சுற்றும் தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved