MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஆளவிடுமா தாயி... டிராமா போட்ட தங்கமயில்; தரமான பதிலடி கொடுத்த கோமதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்

ஆளவிடுமா தாயி... டிராமா போட்ட தங்கமயில்; தரமான பதிலடி கொடுத்த கோமதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நீதிமன்ற வாசலில் சரவணனிடம் அழுது புலம்பும் தங்கமயிலுக்கு செம டோஸ் கொடுத்திருக்கிறார் கோமதி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 14 2026, 11:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian Stores 2 Serial Today Episode
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial Today Episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணன், தங்கமயில் இடையேயான விவாகரத்து வழக்கில் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சரவணன் தனக்கு டைவர்ஸ் வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்க, மறுபுறம் தங்கமயில், தன்னை அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் கொடுமைப்படுத்தியதாகவும், இருந்தாலும் சரவணன் உடன் தனியாக வாழ தனக்கு சம்மதம் என்றும் கூறுகிறார். தனக்கு விவாகரத்தில் சம்மதமே இல்லை என்றும் ஒரே போடாக போட்டுவிடுகிறார் தங்கமயில். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்னென்ன ட்விஸ்டுகள் நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
அரசிக்கு காத்திருந்த அதிர்ச்சி
Image Credit : jiohotstar

அரசிக்கு காத்திருந்த அதிர்ச்சி

சரவணன், கோமதி இருவரும் கோர்ட்டுக்கு சென்றுவிட்டார்கள். பாண்டியனும் கடைக்கு சென்றுவிடுகிறார். இதனால் அரசி மட்டும் வீட்டில் தனியாக இருக்கிறார். அந்த நேரம் பார்த்து மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர், வீட்டுக்குள் வந்து ஹாலில் உள்ள சோஃபாவில் படுத்துக் கொள்கிறார். இதைப்பார்த்ததும் அரசி பயந்துபோகிறார். பின்னர் அவர் கத்தி கூச்சல் போட, உடனே அருகில் இருந்த ராஜியின் பாட்டியும், குமரவேலும் ஓடி வருகிறார்கள். பின்னர் எப்படியோ வீட்டில் இருந்து அரசி வெளியே ஓடி வருகிறார். வந்து குமரவேல் மற்றும் பாட்டியிடம் விஷயத்தை சொல்கிறார்.

Related Articles

Related image1
டைவர்ஸ் கேட்ட சரவணனுக்கு கோர்ட்டில் தங்கமயில் வைத்த செக் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செம ட்விஸ்ட்
Related image2
ஆதங்கத்தை கொட்டிய அஞ்சலி... மன்னிப்பு கேட்ட சரவணன்; தங்கமயில் நிலை என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
35
அட்வைஸ் பண்ணும் குமரவேல்
Image Credit : jiohotstar

அட்வைஸ் பண்ணும் குமரவேல்

இதன்பின்னர் குமரவேல் வீட்டுக்குள் சென்று பார்க்கிறார். அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெரியவர் உள்ளே இருப்பதை பார்த்ததும், அவரை வெளியே இழுத்து வந்து ரோட்டில் விடுகிறார். அந்த நபரை வெளியேற்றிய பின்னர் தான் அரசி சற்று நிம்மதி அடைகிறார். அதன்பின்னர் குமரவேல், அரசியை திட்டுகிறார். இப்படி தான் வீட்டை திறந்துபோட்டுட்டு உக்காந்திட்டு இருப்பியா, ஒழுங்கா கதவை சாத்திகிட்டு உள்ள இரு. அப்படியே யாராச்சும் கதவை தட்டினால், முதலில் ஜன்னல் வழியாக யார் என்பதை பார்த்துவிட்டு கதவை திற என அட்வைஸ் பண்ணிவிட்டு அங்கிருந்து செல்கிறார் குமரவேல்.

45
கோர்ட்டில் டிராமா பண்ணும் தங்கமயில்
Image Credit : jiohotstar

கோர்ட்டில் டிராமா பண்ணும் தங்கமயில்

கோர்ட்டில் விவாகரத்து கிடைக்காத விரக்தியில் சரவணன் நின்று கொண்டிருக்க, அப்போது அங்கு வரும் தங்கமயில், மாமா என்னை ஏத்துக்கோங்க என சொல்லி கெஞ்சி கூத்தாடுகிறார். இதையடுத்து அங்கு வரும் கோமதி மற்றும் செந்தில், ஏன்மா இப்படி டிராமா போடுற, நாங்க உன்னை கொடுமைப்படுத்துனோமா, வாய்க்கூசாம பொய் சொல்ற என கேட்கிறார். அங்கிருந்த தங்கமயிலின் அம்மா, தன் மகளுக்கு ஆதரவாக சப்பைக் கட்டு கட்டுகிறார். தங்கமயில் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும், சரவணன், கோமதி இருவரும் வளைந்து கொடுக்கவே இல்லை. தயவு செஞ்சு எங்களை விட்றுமா என தங்கமயிலிடம் கையெடுத்து கும்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் கோமதி.

55
கோமதியிடம் பேச மறுக்கும் பாண்டியன்
Image Credit : jiohotstar

கோமதியிடம் பேச மறுக்கும் பாண்டியன்

மறுபுறம் கதிரும், ராஜியும் டிரெயினிங் முடிந்து மறுபடியும் ஊருக்கு வருகிறார்கள். அப்போது, எனக்கு தூரமா ஒரு இடத்துல போஸ்டிங் போட்டுவிட்டால் என்ன செய்வது என சொல்லி கதிரிடம் ஃபீல் பண்ணுகிறார் ராஜி. பாண்டியன் கடையில் இருந்து வீட்டுக்கு வருகிறார். அப்போது வீட்டில் யாருமே இல்லாததால், கோமதி தான் அவருக்கு உணவு பரிமாறுகிறார். அந்த சாப்பாடை சாப்பிடும் பாண்டியன், கோமதியிடம் வாய்கொடுத்து பேசாமல் உம்முனே இருக்கிறார். வலுக்கட்டாயமாக கோமதி பேசிப் பார்க்கிறார். ஆனால் பாண்டியன், டக்குனு கையை கழுவிவிட்டு எழுந்து செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
வீட்டை மீட்க நிலா கொடுக்கும் ஐடியா... புதிர்போடும் நடேசன் - அய்யனார் துணை சீரியலில் அனல்பறக்கும் ட்விஸ்ட்
Recommended image2
ஜனனி பற்றி வந்த அப்டேட்... அரண்டுபோன ஆதி குணசேகரன்; போலீஸின் புது ட்விஸ்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image3
விஜயாவின் ஃபிராடு வேலையை கண்டுபிடித்த மீனா; சண்டையில் முடிந்த அருணின் சமாதானப் பேச்சு - சிறகடிக்க ஆசை அப்டேட்
Related Stories
Recommended image1
டைவர்ஸ் கேட்ட சரவணனுக்கு கோர்ட்டில் தங்கமயில் வைத்த செக் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செம ட்விஸ்ட்
Recommended image2
ஆதங்கத்தை கொட்டிய அஞ்சலி... மன்னிப்பு கேட்ட சரவணன்; தங்கமயில் நிலை என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved