MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஆதங்கத்தை கொட்டிய அஞ்சலி... மன்னிப்பு கேட்ட சரவணன்; தங்கமயில் நிலை என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

ஆதங்கத்தை கொட்டிய அஞ்சலி... மன்னிப்பு கேட்ட சரவணன்; தங்கமயில் நிலை என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அஞ்சலிக்கு போன் போட்டு பேசும் சரவணன், அவரின் முதல் திருமண வாழ்க்கை பற்றி விசாரிக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 12 2026, 12:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian Stores 2 Serial Today Episode
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial Today Episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிர் - ராஜி ரொமான்ஸ் ஒரு பக்கம் சென்றுகொண்டிருக்க, மறுபுறம் சரவணன் - அஞ்சலி உடன் ரொமான்ஸ் செய்ய ஸ்டார்ட் பண்ணி இருக்கிறார். முதலில் மெசேஜ் வாயிலாக பேசிக் கொண்ட அவர்கள், பின்னர் போன் போட்டு பேசத் தொடங்கி உள்ளனர். அப்போது தான் சொந்த ஊரில் இருந்தாலும் தனிமையாக இருப்பதை போல உணர்வதாகவும், உன்னோடு பேசுவதால் சற்று ஆறுதலாக இருப்பதாகவும் கூறி இருக்கிறார் அஞ்சலி. அப்பா கடைக்கு வந்ததால் போனை பாதியிலேயே கட் பண்ணிவிடுகிறார் கதிர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
ரொமான்ஸ் பண்ணும் கதிர் - ராஜி
Image Credit : jiohotstar

ரொமான்ஸ் பண்ணும் கதிர் - ராஜி

கதிர் மல்லிகைப்பூ வாங்கி வந்து ராஜியின் தலையில் வைத்துவிடுகிறார். இதைப்பார்த்த ராஜி, இப்போலாம் நல்லா தான் நடந்துக்குற, ஆனா, ஊருக்கு போனதுக்கு அப்புறம், ஏதோ ஒரு ரூம்மேட் மாதிரி தான் என்னை நீ பாக்குற என சொல்கிறார். ராஜி ஃபீல் பண்ணுவதை பார்த்த கதிர், இதுக்கப்புறம் அப்படியெல்லாம் நடந்துக்க மாட்டேன். உன்னோட புருஷன் மாதிரியே நடந்துக்குறேன்னு சொல்கிறார். பின்னர் இருவரும் ரொமான்ஸ் பண்ண தொடங்குகிறார்கள்.

Related Articles

Related image1
பாக்கியம் போட்ட கணக்கு தப்பு! சரவணன் - அஞ்சலி நெருக்கத்தால் பற்றி எரியும் பாண்டியன் வீடு.!
Related image2
அஞ்சலியின் ஆட்டம் ஆரம்பம்... மீண்டும் காதல் வலையில் சிக்கினாரா சரவணன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
35
விவாகரத்து பற்றி பேசும் அஞ்சலி
Image Credit : jiohotstar

விவாகரத்து பற்றி பேசும் அஞ்சலி

மறுபுறம் சரவணன் வழக்கம்போல் அஞ்சலிக்கு மெசேஜ் அனுப்பிக் கொண்டிருக்கிறார். பின்னர் அஞ்சலிக்கு போன் போட்டு பேசும் சரவணன், உன்னோட முதல் திருமணத்தில் என்ன பிரச்சனை? எதற்காக நீ உன்னோட புருஷனை பிரிஞ்ச என சரவணன் கேட்க, அஞ்சலியும் தன்னுடைய கதையை சொல்கிறார். அவருக்கு என்மேல விருப்பமே இல்லை. எதுக்காக என்னை கல்யாணம் பண்ணிகிட்டாருன்னே தெரியல. என்னைய ரொம்ப டார்ச்சர் பண்ணுனாரு. அதனால தான் அவர்கூட வாழப்பிடிக்காம, நான் விவாகரத்து வாங்கிட்டு, என்னுடைய அம்மாவீட்டுல வந்து இருக்கேன்னு சொல்கிறார்.

45
மன்னிப்பு கேட்கும் சரவணன்
Image Credit : jiohotstar

மன்னிப்பு கேட்கும் சரவணன்

அவரை ஆறுதல் படுத்தும் படி சரவணன் பேச, என்னோட வாழ்க்கையில் சந்தோஷமே இருக்கக்கூடாதுனு அந்த ஆண்டவன் முடிவு பண்ணிட்டான் போல இருக்கு, பேசாம நீயே என்னைய கல்யாணம் பண்ணியிருக்கலாம் என கூறுகிறார் அஞ்சலி. பின்னர் சரவணன் அஞ்சலியிடம் மன்னிப்பு கேட்கிறார். ஏனெனில் அவர் அப்பாவோட பேச்சைக் கேட்டு தான் அஞ்சலியை காதலிச்சு கைவிட்டார். அதனால் தற்போது அஞ்சலியின் வாழ்க்கை தற்போது இந்த நிலைமைக்கு வந்ததற்கு தானும் ஒரு காரணம் என நினைத்து, அஞ்சலியிடம் மன்னிப்பு கேட்கிறார் சரவணன்.

55
தங்கமயிலை எச்சரிக்கும் பாக்கியம்
Image Credit : jiohotstar

தங்கமயிலை எச்சரிக்கும் பாக்கியம்

மறுபுறம், தங்கமயில் விவாகரத்து வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு கிளம்புகிறார். அப்போது அவரிடம் பேசும் அவருடைய அம்மா பாக்கியம், கோர்ட்டில் டைவர்ஸ் வாங்கிட்டு இங்க வந்து வாழலாம்னு மட்டும் நினைச்சிராத, உன்னை அப்படியே விரட்டி விட்ருவேன். ஒழுங்கு மரியாதையா கெஞ்சி, கூத்தாடியாச்சும், அந்த குடும்பத்துலயே வாழ்றதுக்கு வழியப்பாருனு மிரட்டுகிறார். இதனால் ஒருவித பதற்றத்திலேயே கோர்ட்டுக்கு செல்கிறார் தங்கமயில். அங்கு என்ன நடக்கப்போகிறது? சரவணனுடன் தங்மயில் மீண்டும் சேர்வாரா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
மதிவதினியை காப்பாற்றிய ஜனனி... கடைசியில் ட்விஸ்ட் வைத்த கிட்னி திருடன் தேவசகாயம் - எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image2
நிலாவை டார்ச்சர் பண்ணும் ராகவ்... வீட்டுக்கு சீல் வைக்க வந்த போலீஸ் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image3
ரோகிணிக்கு பயந்து மனோஜை சிக்கலில் மாட்டிவிடும் விஜயா - சிறகடிக்க ஆசை சீரியலில் சரவெடி ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
பாக்கியம் போட்ட கணக்கு தப்பு! சரவணன் - அஞ்சலி நெருக்கத்தால் பற்றி எரியும் பாண்டியன் வீடு.!
Recommended image2
அஞ்சலியின் ஆட்டம் ஆரம்பம்... மீண்டும் காதல் வலையில் சிக்கினாரா சரவணன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved