MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • பாக்கியம் போட்ட கணக்கு தப்பு! சரவணன் - அஞ்சலி நெருக்கத்தால் பற்றி எரியும் பாண்டியன் வீடு.!

பாக்கியம் போட்ட கணக்கு தப்பு! சரவணன் - அஞ்சலி நெருக்கத்தால் பற்றி எரியும் பாண்டியன் வீடு.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிகை சாத்திகா 'அஞ்சலி'யாக நுழைகிறார். சரவணனின் தோழியாக வரும் இவரது வருகை, பாக்கியத்தின் சந்தேகத்தால் குடும்பத்தில் புயலைக் கிளப்புவதோடு, சரவணன் - தங்க மயில் இடையே ஒரு முக்கோண காதல் கதையை உருவாக்குகிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 10 2026, 02:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அஞ்சலியின் வருகையும் அதிரடி திருப்பங்களும்!
Image Credit : Jio Hotstar

அஞ்சலியின் வருகையும் அதிரடி திருப்பங்களும்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக, வெள்ளித்திரையில் முத்திரை பதித்த நடிகை சாத்திகா தற்போது இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் களமிறங்கியுள்ளார். கார்த்தியுடன் 'நான் மகான் அல்ல' மற்றும் சுசீந்திரன் இயக்கத்தில் 'நெஞ்சில் துணிவிருந்தால்' போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த இவர், இப்போது 'அஞ்சலி' என்ற பெயரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்குள் நுழைகிறார். இவருடைய வருகை சீரியலின் டிஆர்பி-யை எகிற வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

24
அழுகாச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அஞ்சலி
Image Credit : Jio Hotstar

அழுகாச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அஞ்சலி

இதுவரை சீரியலில் தங்க மயில் கதாபாத்திரம் செய்யும் தவறுகளும், அதற்காக அவர் சிந்து கண்ணீரும் ரசிகர்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அஞ்சலியின் கதாபாத்திரம் மிகவும் துடிப்பானதாகவும், கதையின் போக்கை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சரவணனின் நெருங்கிய தோழியாக வரும் அஞ்சலி, ஒரு நவீன கால பெண்ணாகக் காட்டப்படுகிறார். இவருடைய வருகைக்குப் பிறகு சீரியலில் சோகக் காட்சிகள் குறைந்து, விறுவிறுப்பான நகர்வுகள் அதிகம் இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Related image1
Pandian Stores 2: கோவிலில் சொக்கிப்போன சரவணன்.! நீதிமன்றத்தில் பொங்கிய தங்க மயில்.! புதிர்போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Related image2
Pandian Stores 2: பாண்டியன் ஸ்டோர்ஸில் அடுத்த அதிரடி! அஞ்சலி என்ட்ரியால் ஆட்டம் காணும் தங்கமயிலின் வாழ்க்கை!
34
பாக்கியத்தின் சந்தேகம் - பற்றி எரியும் குடும்பம்
Image Credit : Jio Hotstar

பாக்கியத்தின் சந்தேகம் - பற்றி எரியும் குடும்பம்

அஞ்சலியின் வருகை பாண்டியன் வீட்டில் அமைதியை மட்டும் கொண்டு வரப்போவதில்லை கூடவே சில குழப்பங்களையும் கொண்டு வரப்போகிறது. சரவணனும் அஞ்சலியும் நெருங்கிப் பழகுவதைப் பார்த்து, பாக்கியம் அவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ இருப்பதாகச் சந்தேகிக்கத் தொடங்குகிறார். இந்தச் சந்தேகம் குடும்பத்திற்குள் பெரிய புயலைக் கிளப்பப் போகிறது. அஞ்சலி உண்மையில் சரவணன் - தங்க மயில் வாழ்க்கையை் சீரமைக்கவே முயற்சிப்பார், ஆனால் அது பாக்கியத்தின் கண்களுக்குத் தவறாகத் தெரிவது கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுமாம்.

44
தியாகியாக மாறும் தங்க மயில்?
Image Credit : Jiohotstar

தியாகியாக மாறும் தங்க மயில்?

கதையின் உச்சக்கட்டமாக, சரவணன் மற்றும் அஞ்சலிக்கு இடையே இருக்கும் அழகான புரிதலையும் கெமிஸ்ட்ரியையும் பார்த்து தங்க மயில் ஒரு பெரிய முடிவை எடுக்கத் துணிவார் என கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், சரவணனுக்கு அஞ்சலிதான் சரியான ஜோடி என்று நினைத்து, அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கத் துணியும் அளவிற்கு தங்க மயில் தியாகம் செய்ய முன்வருவார் எனத் தெரிகிறது. சினிமா பாணியில் அமையப்போகும் இந்த முக்கோண காதல் கதைக்களம், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரை ஒரு புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
சினிமா காட்சியகம்
திரைப்பட விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதவனுடன் 2வது திருமணமா? உண்மையை போட்டுடைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை விலாசினி
Recommended image2
சிறகடிக்க ஆசை ரோகிணியின் நிஜ கணவர் இவரா..? மேக்-அப் இல்லாத ஒரிஜினல் சல்மா எப்படி இருப்பார் தெரியுமா..?
Recommended image3
அஞ்சலி அனுப்பிய மெசேஜ்... ஆடிப்போன சரவணன்; அழுது புலம்பும் தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Related Stories
Recommended image1
Pandian Stores 2: கோவிலில் சொக்கிப்போன சரவணன்.! நீதிமன்றத்தில் பொங்கிய தங்க மயில்.! புதிர்போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Recommended image2
Pandian Stores 2: பாண்டியன் ஸ்டோர்ஸில் அடுத்த அதிரடி! அஞ்சலி என்ட்ரியால் ஆட்டம் காணும் தங்கமயிலின் வாழ்க்கை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved