- Home
- Cinema
- ‘நட்சத்திரம் நகர்கிறது உங்களோட பெஸ்ட் படம்’னு சொன்னாரு... பா.இரஞ்சித்தை குஷியாக்கிய சூப்பர்ஸ்டாரின் வாழ்த்து
‘நட்சத்திரம் நகர்கிறது உங்களோட பெஸ்ட் படம்’னு சொன்னாரு... பா.இரஞ்சித்தை குஷியாக்கிய சூப்பர்ஸ்டாரின் வாழ்த்து
Natchathiram Nagargiradhu : நட்சத்திரம் நகர்கிறது படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பா.இரஞ்சித்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தி உள்ளார்.

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் பா.இரஞ்சித். அட்டக்கத்தி படம் மூலம் தொடங்கிய இவரது திரைப்பயணம், தற்போது 10 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக நகர்ந்து வருகிறது. இந்த 10 ஆண்டுகளில் இவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை குறைவு தான், ஆனால் அவை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.
இதுவரை அட்டக்கத்தி, கபாலி, காலா, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை இயக்கிய பா.இரஞ்சித், தற்போது இயக்கியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது. காளிதாஸ் ஜெயராம் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சார்பட்டா படத்தின் நாயகி துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் கலையரசனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்... நாயகனும் வரார்... தளபதியும் வரார்..! மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ஆடியோ லான்ச் அப்டேட் இதோ
காதலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி உள்ளார் பா.இரஞ்சித். நாடகக் காதல், ஓரினச் சேர்க்கையாளர்களின் காதல் பற்றியும் இப்படத்தில் பேசி உள்ளனர். கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் ரிலீசான இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், நட்சத்திரம் நகர்கிறது படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பா.இரஞ்சித்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தி உள்ளார். ரஜினியின் வாழ்த்தால் உற்சாகமடைந்த பா.இரஞ்சித், அவர் என்ன சொன்னார் என்பதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன்படி இதுவரை நீங்கள் எடுத்த படங்களிலேயே இதுதான் பெஸ்ட் படம் என்றும் இப்படத்தில் உங்களது இயக்கம், எழுத்து, கதாபாத்திரங்கள் தேர்வு, கலை, ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் சிறப்பாக இருந்ததாக ரஜினி பாராட்டினார் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பா.இரஞ்சித், அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் பரிசு... சர்ப்ரைஸ் போஸ்டர்களை வெளியிட்டு மாஸ் அப்டேட் கொடுத்த விடுதலை டீம்