வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் பரிசு... சர்ப்ரைஸ் போஸ்டர்களை வெளியிட்டு மாஸ் அப்டேட் கொடுத்த விடுதலை டீம்
Director vetrimaaran Birthday : இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்தநாளான இன்று, அவருக்கு பிறந்தநாள் பரிசளிக்கும் விதமாக விடுதலை படக்குழு இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவனில் தொடங்கி ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என இவர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்களாகும்.
இயக்குனர் வெற்றிமாறன் இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருவதால், டுவிட்டரில் #HBDvetrimaaran என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இவரது பிறந்தநாள் பரிசாக இவர் இயக்கும் படங்களின் அப்டேட்டும் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்த கோப்ரா... ரிலீசாகி ஒரு வாரம் கூட ஆகல அதற்குள் இந்த நிலைமையா..!
அந்த வகையில், வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது உருவாகி விடுதலை படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி வெற்றிமாறனின் புகைப்படங்களுடன் கூடிய போஸ்டர்களை வெளியிட்டு, இப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆவதை அதன் மூலம் உறுதிப்படுத்தி உள்ளது படக்குழு. மேலும் இந்த இரண்டு பாகங்களும் விரைவில் தியேட்டர்களில் வெளியாகும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த இரண்டு போஸ்டர்களும் வைரலாகி வருகின்றன.
வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கிறார். அதேபோல் நடிகர் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்து வருகிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... 13 வயசுலயே செயின் ஸ்மோக்கர்.. ஒருநாளைக்கு 170 சிகரெட் பிடித்த வெற்றிமாறன் அதிலிருந்து மீண்டுவந்த கதை தெரியுமா?