ஜெயிலருக்கே ஜெயிலா! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இத்தனை முறை கைதாகி இருக்கிறாரா?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், வில்லங்கத்தில் சிக்கி அடுத்தடுத்து கைதான சம்பவம் பற்றியும் அதற்கான காரணம் பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Rajinikanth Arrested
1977-ம் ஆண்டு தமிழ்நாட்டில் முதல்முறையாக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தார் எம்.ஜி.ஆர். அதே காலகட்டத்தில் தான் நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் வெற்றிகரமான நடிகராக வலம் வரத் தொடங்கினார். அந்த நேரத்தில் தான் பிரியா, முள்ளும் மலரும் போன்ற வெற்றிப்படங்கள் ரஜினிக்கு வெளியானது. அதேபோல 1979ம் ஆண்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அந்த படத்தின் ரிலீசுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தான் ஒரு முக்கியமான செய்தி நாளிதழ்களில் இடம்பெற்றது.
அது என்னவென்றால், நடிகர் ரஜினிகாந்த் கைது செய்யப்பட்டார் என்கிற செய்தி தான். ரஜினியின் இந்த கைதுக்கு காரணமாக இருந்தது அப்போது வாரப்பத்திரிகை ஒன்றில் சினிமா செய்தியாளராக இருந்த ஜெயமணி என்பவர் தான். அவர் அளித்த புகாரின் பேரில் தான் ரஜினி கைது செய்யப்பட்டார்.
Rajinikanth, MGR
அந்த புகாரில், சென்னை மியூசிக் அகாடமி அருகே நான் நின்றுகொண்டிருந்தேன். அப்போது அந்த பக்கமா ரஜினிகாந்த் காரில் வந்துகொண்டு இருந்தார். என்னை பார்த்த உடன் என்மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி செய்தார் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் 1979-ம் ஆண்டு மார்ச் 7ந் தேதி, ராயப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரமும், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்டினும் ரஜினியை கைது செய்தனர். கைதுக்கு பின் ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் நள்ளிரவு வரை வைத்திருந்தார்களாம். அதன்பின்னர் ஜாமினில் ரஜினியை விடுவித்துள்ளார்கள்.
2 பிரிவுகளின் கீழ் ரஜினி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதையொட்டி ரஜினி தனது வாக்குமூலத்தையும் பதிவு செய்திருந்தார். கார் ஓட்ட எனக்கு லைசன்ஸ் இல்லை. டிரைவரும் இல்லாததால் நானே தான் கார் ஓட்டினேன். அன்றைக்கு வழியில் ஜெயமணியனை பார்த்தேன். அவர் என்னைப்பற்றி நிறைய தவறான செய்திகளை எழுதியது நியாபகம் வந்தது. அதனால் அவர் அருகில் சென்று காரை நிறுத்தினேன். அவரை கொல்லனும்னு நான் முயற்சி பண்ணல.
இதையும் படியுங்கள்... கோடாங்கி பேச்ச கேட்காம தப்பு பண்ணிட்டேன்; 18 வருஷமா என் கணவரை காணவில்லை - பகீர் கிளப்பிய ரேகா நாயர்
Superstar Rajinikanth
காரை நிறுத்திவிட்டு நான் இறங்கிய உடனே ஜெயமணி தான் தன் காலில் இருந்த செருப்பை கழட்டி என்னை அடிக்க வந்தார். அவர் அப்படி காட்டியதும் எனக்கு கோபம் வந்துவிட்டது. உடனே நான் அவருடைய சட்டையை பிடித்தேன். மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை என ரஜினிகாந்த் வாக்குமூலம் அளித்திருந்தார். ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால் தான் ஜெயமணியை மிரட்டவில்லை என்பது தான் ரஜினி அளித்த வாக்குமூலத்தின் சாராம்சம்.
Rajinikanth controversy
இந்த பிரச்சனை அடங்குவதற்குள் அடுத்த மூன்றே மாதங்களில் ரஜினி மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த முறை ஐதராபாத்தில் நடந்த பிரச்சனையால் ரஜினி கைதானார். படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றிருந்தார். அங்கிருந்து சென்னைக்கு இரவு 11 மணி பிளைட்டை பிடிக்க ரஜினி விமான நிலையம் வந்திருக்கிறார். அப்போது குடித்துவிட்டு செம்ம போதையில் வந்திருக்கிறார் ரஜினி. போதையில் விமான நிலையத்தில் கலாட்டா செய்தாராம் ரஜினி.
பின்னர் விமான நிலைய அதிகாரிகள் அங்குள்ள தனி அறைக்கு அவரை அழைத்து சென்றிருக்கிறார்கள். அங்கும் அவரது கோபம் தீராமல் அனைவருடனும் சண்டையிட்டு ஆத்திரத்தில் அந்த அறையில் இருந்த கண்ணாடிகளை அடித்து உடைத்திருக்கிறார்.
why Rajinikanth Arrested
இதனால் விமான நிலைய அதிகாரிகள் ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ததோடு, அவரின் விமான டிக்கெட்டையும் ரத்து செய்தனர். அப்போது நாளிதழ்களிலும் ரஜினிகாந்தின் கைது விவகாரம் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
ரஜினிகாந்தின் இந்த கைது நடவடிக்கை இரண்டுமே எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் நடந்தது. அதன் பின்னர் சினிமாவில் கோலோச்ச தொடங்கிய ரஜினிகாந்த், அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தார். மதுவுக்கு அடிமையாக இருந்த ரஜினியை புத்திமதி சொல்லி திருத்தியவர் கே பாலச்சந்தர். பாலச்சந்தர் பேச்சைக்கேட்டு குடியைவிட்ட ரஜினி அதன் பின்னர் மது அருந்தவே இல்லை. அதுமட்டுமின்றி சுத்த சைவமாகவும் மாறிவிட்டார்.
இதையும் படியுங்கள்... கற்பைக் காப்பாற்ற போராடிய விஜய் & சூர்யா - மிஸ்டர் க்ளீன்னு சர்டிபிகேட் கொடுக்கும் பாடகி சுச்சி!