உத்தரபிரதேச கவர்னருடன் திடீர் சந்திப்பு.. முதல்வருடன் ஜெயிலர் பட ஸ்பெஷல் ஷோ - சூப்பர்ஸ்டாரின் திட்டம் என்ன?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி உலக அளவில் பல வசூல் சாதனைகளை படைத்து வருகிறது ஜெயிலர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது இமயமலை பயணத்தை தொடங்கினார். சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து இந்த இமயமலை பயணத்தை அவர் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இமயமலை பயணம் முடிந்த பிறகு நேரடியாக அவர் சென்னை திரும்புவார் என்று அனைவரும் எண்ணிய நிலையில் அவர் இமயமலை பயணத்தை முடித்த பிறகு ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்று அங்கு ஆளுநராக பதவி வகித்து வரும் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் தமிழக பாஜக தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து, ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அவரோடு சிறிது நேரம் பேசினார்.
இந்த ஜார்க்கண்ட் பயணத்தை முடித்துவிட்டாவது அவர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்த்து நிலையில் அடுத்தபடியாக தற்பொழுது உத்தர பிரதேச மாநிலத்திற்கு சென்று அம்மாநில கவர்னர் அம்மையார்
Anandiben Patel அவர்களை சந்தித்து பேசியுள்ளார். அதேபோல ஏற்கனவே வெளியாகி உள்ள தகவலின்படி அவர் இன்று ஆகஸ்ட் 19ம் தேதி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தை பார்க்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலில் இருந்து விலகுவதாக ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்த நிலையில், அவரது ஆன்மீக பயணம் முடிந்தது, தற்போது அவர் மேற்கொண்டிருக்கும் பயணங்கள் மீண்டும் அவர் அரசியலில் இறங்கப்போவதற்கான அறிகுறியா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் அவருடைய ரசிகர்கள். ஆனால் அவருடைய திட்டம் என்னவென்பது அவருக்கு மட்டுமே தெரியும்.
'எதிர்நீச்சல்' சீரியலில் இருந்து அதிரடியாக தூக்கப்பட்ட கதாபாத்திரம்! யார் தெரியுமா?