MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 33 ஆண்டுகள் கழித்து இணையும் வெற்றிக்கூட்டணி - டிசம்பரில் வரும் "தலைவர் 173" அப்டேட்?

33 ஆண்டுகள் கழித்து இணையும் வெற்றிக்கூட்டணி - டிசம்பரில் வரும் "தலைவர் 173" அப்டேட்?

Thalaivar 173 : பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் பிரபல இயக்குனர் ஒருவரோடு இணையவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றது.

2 Min read
Author : Ansgar R
Published : Oct 05 2024, 10:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Rajini thalapathi

Rajini thalapathi

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள "வேட்டையன்" திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. கடந்த ஆண்டு பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் "ஜெயிலர்" என்ற திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த நிலையில், அப்படம் உலக அளவில் சுமார் 640 கோடி ரூபாய் வரை வசூல் செய்து மெகா ஹிட் திரைப்படமாக மாறியது. அதற்கு பிறகு தான் "வேட்டையன்" திரைப்படத்தில் அவர் நடிக்க தொடங்கினார். இப்போது அப்பாட பணிகளையும் முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் "கூலி" என்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.

தளபதி போட்ட உத்தரவு.. புஸ்ஸி ஆனந்திடம் ஆசி பெற்று.. த.வெ.க-வில் இணைந்தார் தாடி பாலாஜி!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Thalapathi Movie

Thalapathi Movie

தமிழ் திரையுலகை பொறுத்த வரை கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான "அபூர்வராகங்கள்" என்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை பயணத்தை தொடங்கியவர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துக்கு அறிமுகத்தை கொடுத்தவர் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் என்றால், ரஜினிகாந்தின் நடிப்புத் திறமையை மிக அழகாக வெளிப்படுத்தியவர் இயக்குனர் மகேந்திரன். அதே போல ஒரு ஆக்சன் நடிகராக ரஜினிகாந்தை பல திரைப்படங்களில் வெளிக்காட்டியவர் எஸ்.பி முத்துராமன். இப்படி இயக்குனர்களின் நடிகராக கடந்த 50 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வரும் ரஜினிகாந்திற்கே சவால் விடுக்கும் வகையில் கடந்த 1991 ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளியானது ஒரு படம். 

அந்த திரைப்படத்தின் இயக்குனர், அதுவரை ரஜினியை அனைவரும் பார்த்த விதத்தில் இருந்து வேறொரு கண்ணோட்டத்தில் பார்த்தார் என்றால் அது மிகையல்ல. அதாவது ஸ்டைல் இல்லாமல், பன்ச் டைலாக் இல்லாமல் ரஜினியை வைத்து ஒரு படம் எடுத்தார்.

34
Maniratnam

Maniratnam

கடந்த 1991 ஆம் ஆண்டு இளையராஜா இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்மூட்டி, அரவிந்த்சாமி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான திரைப்படம் தான் "தளபதி". சுமார் 33 ஆண்டுகள் கழித்தும் அந்த திரைப்படத்திற்கு இன்றளவும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னதாக உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து "நாயகன்" என்ற திரைப்படத்தை இயக்கிய மணிரத்தினம் தான் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை "தளபதி" திரைப்படத்தில் நடிக்க வைத்திருந்தார். அதன்பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மணிரத்தினத்தோடு இணைந்து திரைப்படமே நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

44
Rajinikanth

Rajinikanth

இந்நிலையில் சுமார் 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இயக்குனர் மணிரத்தினம் இணைய உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படமாக இப்படம் உருவாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் அன்று இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும்கூறப்படுகிறது. 

தற்பொழுது அவர் நடித்துவரும் கூலி திரைப்பட பணிகளை முழுமையாக முடித்த பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் பணிகளில் அவர் ஈடுபட உள்ளார். அப்பட பணிகளையும் முடித்த பிறகு தனது 173 ஆவது திரைப்படமாக மணிரத்தினத்துடன் அவர் இணைய வாய்ப்புகள் இருப்பதாகவும், மேலும் அந்த திரைப்படத்தோடு தனது கலை உலக வாழ்க்கைக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்து உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. 

H Vinoth and Vijay: ரூ.1000 கோடியை குறி வைத்த விஜய் – வரலாற்று சாதனை படைக்குமா Thalapathy 69?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
ஜெயிலர் 2
ரஜினிகாந்த்
தலைவர் 173
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved