- Home
- Cinema
- 'கூலி' படத்திற்கு ரூ.1000 கோடி வசூல் கன்ஃபாம்! படத்தை பார்த்த பிரபலத்தின் முதல் விமர்சனம் வந்தாச்சு!
'கூலி' படத்திற்கு ரூ.1000 கோடி வசூல் கன்ஃபாம்! படத்தை பார்த்த பிரபலத்தின் முதல் விமர்சனம் வந்தாச்சு!
Coolie Movie First Review: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகி உள்ளது.

'வேட்டையன்' (vettaiyan) படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) தற்போது நடித்துவரும் திரைப்படம் 'கூலி'. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த திரைப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதிமாறன் தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நாகார்ஜுனா (Nagarjuna) , உபேந்திரா (Uppendra) , சௌபின் ஷஹீர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், ரெபே மோனிகா ஜான், ஜூனியர் எம்ஜிஆர், அமீர்கான், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் டான்ஸ் ஆடிய பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹிட்டே (Pooja Hegde) இந்த திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் டான்ஸ் ஆடியுள்ளார். மேலும் இதற்காக மட்டுமே இவருக்கு மூன்று கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு, அனிருத் ரவிச்சந்திரன் (Anirudh Ravichandran) இசையமைக்க கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளர்.
கூலி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?
முதல் விமர்சனத்தை பிரபல நடிகர் சந்தீப் கிஷன் கூறியுள்ளார்
இந்நிலையில் இந்த படம் குறித்து தற்போது தன்னுடைய முதல் விமர்சனத்தை பிரபல நடிகர் சந்திப் கிஷன் (Sundeep Kishan) கூறியுள்ளது ரஜினிகாந்த் ரசிகர்களை குஷியாக்கி உள்ளது. அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தின், முதல் 45 நிமிட காட்சியை பார்த்துவிட்டதாகவும் கண்டிப்பாக இப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்யும் என இவர் தெரிவித்துள்ளது, படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
ரஜினிகாந்த் ஒரு கேங்ஸ்டர் ஆக நடித்துள்ளார்
இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு கேங்ஸ்டர் (Gang Star) ஆக நடித்துள்ளார். கோல்டு ஸ்மக்லிங் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, 30 சதவீதம் முடிவடைந்துவிட்ட நிலையில், மீதமுள்ள காட்சிகளை இயக்குவதில் படக்குழு முழு கவனம் செலுத்தி வருகிறது. இந்த படத்தை கூடிய விரைவில் முடித்து, ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய பட குழுவினர் தயாராகி உள்ளனர்.
20 வருஷமா சினிமாவில் சம்பளமே வாங்காமல் நடிக்கும் அமீர் கான் - காரணம் என்ன?
ரஜினிகாந்தின் 171-வது திரைப்படம்:
ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த், 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் இணைய உள்ளார். இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தான் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தில் நடித்த பல நடிகர்கள் இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்தாலும், இன்னும் பல நடிகர்கள் புதிதாக இணை உள்ளனர். அதேபோல் முதலில் இந்த படத்தில் பிரபல நடிகர் சிவராஜ்குமார் நடிக்க மாட்டார் என கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தயாராகி வரும் நிலையில் ஜெயிலர் 2 படத்திலும் களமிறங்கி மாஸ் காட்சியில் தெறிக்க விடுவார் என்பது உறுதியாகி உள்ளது.