காலில் செருப்பு கூட போடாமல்... மாலத்தீவில் ஹாய்யாக வாக்கிங் செல்லும் ரஜினிகாந்த்! வைரலாகும் புகைப்படம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது மாலத்தீவுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு வாக்கிங் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், மாலத்தீவுக்கு சென்ற போது... இலங்கை விமான நிலையத்தில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்தபோது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
தற்போது மாலத்தீவில் உள்ள கடற்கரை மணலில்... கால்களில் செருப்புகள் கூட அணியாமல், டீ ஷர்ட் மற்றும் ட்ரவுசர் அணிந்து... இயற்க்கை அழகை ரசித்தபடி ரஜினிகாந்த் வாக்கிங் செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்து, ரசிகர்கள் பலர், ரஜினிகாந்த் கோலிவுட் திரையுலகில் வசூல் மன்னனாக இருந்தாலும், கோடி கணக்கில் சம்பளம் வாங்கினாலும்.. எவ்வளவு எளிமையாக இருக்கிறார் என தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பொதுவாக ரஜினிகாந்த் படப்பிடிப்பு முடிந்தால், பெங்களூர் சென்று அங்குள்ள பண்ணை வீட்டிலோ அல்லது சென்னையில் உள்ள பண்ணை வீட்டிலோ குடும்பத்தினருடன் ஓய்வு நாட்களை கழிப்பதை வழக்கமாக வைத்திருந்த நிலையில், இந்த முறை மாலத்தீவுக்கு விசிட் அடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில்... 'ஜெயிலர்' படத்திலும், மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் 'லால் சலாம்' படத்திலும் நடித்து முடித்துள்ளார். ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. நேற்று இப்படத்தில் இருந்து வெளியான ஹுக்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மகள் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'லால் சலாம்' திரைப்படம் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.