- Home
- Cinema
- Pragathi Guruprasad: பிரபலத்துடன் காதலை உறுதி செய்த சூப்பர் சிங்கர் பிரகதி; புகைப்படம் வைரல்!
Pragathi Guruprasad: பிரபலத்துடன் காதலை உறுதி செய்த சூப்பர் சிங்கர் பிரகதி; புகைப்படம் வைரல்!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பின்னணி பாடகி பிரகதி குருபிரசாத் தன்னுடைய காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு காதலை உறுதி செய்துள்ளார்.

விஜய் டிவியில், எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும், ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. அந்த விதத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2012-ஆம் ஆண்டு நடந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தான் பிரகதி. இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்றாலும், இவருடைய குடும்பத்தினர் அமெரிக்காவில் செட்டில் ஆனதால், அங்கிருந்து இந்தியா வந்து தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
சூப்பர் சிங்கர் சீசன் 3 போட்டியாளர் பிரகதி குரு பிரசாத்
ஏராளமான மெலடி பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த பிரகதி, தற்போது பின்னணி பாடகியாக உள்ளார். அதே போல் ஏராளமான ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார். தமிழில் மட்டும் இன்றி இவருடைய ஆங்கில பாடல்களுக்கு ஹாலிவுட்டிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்னர் தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்திய பிரகதி, கடந்த சில வருடங்களாக சமூக வலைத்தளத்திலும் மிகவும் ஆக்டிவாக உள்ளார்.
நிறைவேறாத பிரகதியின் ஹீரோயின் ஆசை
இவரை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். பாடல் பாடுவதை தொடர்ந்து, திரைப்படத்தில் ஹீரோவாகவும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி 'பரதேசி' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த பிரகதி, மீண்டும் பாலா இயக்கத்தில் ஹீரோயினாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் பின்னர் ஒரு சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது.
அசோக் செல்வனுடன் காதல் வதந்தி
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, பிரகதி நடிகர் அசோக் செல்வனை காதலித்து வருவதாக ஒரு தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து பேசிய அசோக் செல்வன் பிரகதி தன்னுடைய நல்ல தோழி என கூறினார். அதன் பின்னரே, அசோக் செல்வன் காதலித்து வருவது, நடிகை கீர்த்தி பாண்டியன் என்கிற தகவல் வெளியானது. அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திருமணத்திலும் பிரகதி அமெரிக்காவில் இருந்து வந்து கலந்து கொண்டார்.
காதலரோடு சூப்பர் சிங்கர் பிரகதி
இதுவரை முரட்டு சிங்கிளாக இருந்த பிரகதி, தற்போது காதலிக்கும் விஷயத்தை காதலரின் புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளார். காதலர் தோளில் கை போட்டபடி இருக்கும், ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சில் அவுட் புகைப்படத்தை அவர் வெளியிட்டிருந்தாலும், அந்த பிரபலம் யார் என்பதை கண்டுபிடித்து ரசிகர்கள் அவர் ஒரு பிரபலம் என்பதை கண்டுபிடித்து விட்டனர்.
இது ரொம்ப ஓவர்... உடலில் எண்ணையை தடவி... ஜாக்கெட் போடாமல் போஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் பிரகதி!
, சூப்பர் சிங்கர் சீசன் 7 சாம் விஷால்:
அவர் வேறு யாரும் அல்ல, சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான, சாம் விஷாலை தான் பிரகதி காதலித்து வருகிறாராம். சாம் விஷால் தமிழில் ஏராளமான ஆல்பம் பாடல்களையும், பல திரைப்படங்களில், பின்னணி பாடகராவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.