அந்த நேரத்தில் மட்டும்... குழந்தைங்க என்கிட்ட இருக்கக் கூடாது - ஸ்டிரிக்ட் ஆக சொன்ன சன்னி லியோன்
பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சன்னி லியோன், சமீபத்திய பேட்டி ஒன்றில் சொன்ன கருத்துக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.
கவர்ச்சி நடிகை சன்னி லியோன், ஆரம்ப காலகட்டத்தில் புகழ்பெற்ற ஆபாச பட நடிகையாக வலம் வந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவர் கனடாவில் பிறந்து வளர்ந்தார். கடந்த 2012-ம் ஆண்டு ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு இந்தியா வந்த சன்னி லியோன், பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் நடித்த சன்னி லியோனுக்கு தமிழ், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி தமிழில் வடகறி என்கிற படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து குத்தாட்டம் போட்டிருந்தார். இதுதவிர தற்போது ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சன்னி லியோன்.
இதையும் படியுங்கள்... மாநாடு இயக்குனரை ரிப்பீட் மோடில் கலாய்த்த SK... வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையே டுவிட்டர் கலாட்டா
சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை சன்னி லியோன் டேனியல் வைபர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. அதில் இரட்டை ஆண் குழந்தைகளை இத்தம்பதி வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொண்டது. இதுதவிர நிஷா கவுர் என்கிற பெண் குழந்தையும் சன்னி லியோனுக்கு உள்ளது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சன்னி லியோன் சொன்ன கருத்துக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. அதாவது ஷூட்டிங்கில் தான் கவர்ச்சியாக நடனமாடும் போது தனது குழந்தைகளோ அல்லது பிறரது குழந்தைகளோ அருகில் இருப்பதை விரும்பமாட்டேன் என்றும் அப்படி அவர்கள் இருந்தால் படப்பிடிப்பையே நிறுத்திவிடுவேன் எனவும் சன்னி லியோன் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... சூப்பர்மாடல் எங்கே?... போலீசுக்கே தண்ணிகாட்டும் மீரா மிதுன் - கண்டுபிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை