- Home
- Cinema
- Gabriella Sellus : சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவுக்கு ஜாம் ஜாம்னு நடைபெற்ற வளைகாப்பு!
Gabriella Sellus : சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவுக்கு ஜாம் ஜாம்னு நடைபெற்ற வளைகாப்பு!
சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்ததன் மூலம் பேமஸ் ஆன கேப்ரியல்லா செல்லஸுக்கு வளைகாப்பு நடைபெற்று இருக்கிறது.

சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்
சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் ஆனவர் கேப்ரியல்லா செல்லஸ். கருப்பான தேகத்துடன் இருந்தால் ஹீரோயினாக நடிக்க முடியாது என்கிற பிம்பத்தை தகர்த்தெறிந்தவர் கேப்ரியல்லா. நடிக்க திறமை மட்டும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் ஹீரோயின் ஆகலாம் என்பதை சுந்தரி சீரியல் மூலம் நிரூபித்து காட்டி இருக்கிறார் கேப்ரியல்லா செல்லஸ்.
முடிவுக்கு வந்த சுந்தரி சீரியல்
இவர் சன் டிவி மூலம் பாப்புலர் ஆனாலும் இவர் தன்னுடைய பயணத்தை முதன்முதலில் தொடங்கியது விஜய் டிவியில் தான். விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய கேப்ரியல்லா, அதில் தன்னுடைய நகைச்சுவை திறமையை காட்டி ரசிக்க வைத்தார். அதேபோல் டிக் டாக்கில் இவர் போடும் வீடியோக்களும் ரசிகர்களை கவர்ந்ததால் அதன் மூலம் கேப்ரியல்லாவுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படியுங்கள்... மீடியாவே வேண்டாம்! சன் டிவி சூப்பர் ஹிட் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் அதிரடி முடிவு - ஏன் தெரியுமா?
கேப்ரியல்லா செல்லஸ் கர்ப்பம்
அதன்படி நயன்தாராவின் ஐரா திரைப்படத்தில் முதன்முறையாக நடித்த கேப்ரியல்லா, பின்னர் ரஜினியுடன் கபாலி, லாரன்ஸின் காஞ்சனா 3 போன்ற படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்திருந்தார். இதையடுத்து சினிமாவில் பெரியளவில் சோபிக்க முடியாததால் சின்னத்திரை பக்கம் ஒதுங்கிய கேப்ரியல்லா, சீரியல்களில் நடிக்க தொடங்கினார். சன் டிவியில் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சுந்தரி சீரியல் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது.
கேப்ரியல்லா செல்லஸ் வளைகாப்பு
சுந்தரி சீரியல் முடிந்த கையோடு நடிகை கேப்ரியல்லா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து பிரிந்ததாக செய்திகள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கணவரோடு ஜோடியாக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டார் கேப்ரியல்லா. அதுமட்டுமின்றி தான் கர்ப்பமாக இருக்கும் தகவலையும் அறிவித்து இருந்தார்.
சுந்தரி சீரியல் குழுவினருடன் கேப்ரியல்லா செல்லஸ்
இந்நிலையில் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவுக்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. கோலாகலமாக நடைபெற்ற வளைகாப்பு விழாவில் அவருடன் சுந்தரி சீரியலில் பணியாற்றிய பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்தினர். கேப்ரியல்லாவின் வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... சுந்தரி சீரியல் முடிந்த கையோடு குட் நியூஸ் சொன்ன கேப்ரியல்லா! குவியும் வாழ்த்துக்கள்