'நாயகி' சீரியல் கண்மணிக்கு திருமணம் முடிந்தது..! இவர் தான் மாப்பிள்ளையா?
சமீப காலமாக சீரியல் நடிகைகளுக்கும் அதிக அளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி உள்ளது.
அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியலான, நாயகி, பாண்டவர் இல்லம் உள்ளிட்ட சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வரும் பப்ரி கோஷுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ள இவருக்கு ரசிகர்கள் மற்றும் இவருடன் பணியாற்றிய சீரியல் பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பப்ரி கோஷின் திருமண புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது.
தற்போது நாயகி, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, சித்து 2, மகராசி போன்ற சீரியல்களில் நடித்து வரும் இவர், திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சீரியல்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்டுகிறது.
திருமணத்தில் பார்க்கவே மிகவும் வித்தியாசமான மேக்அப்பில் உள்ளார் பப்ரி கோஷ். இவருக்கு ஏசியா நெட் சார்பாகவும் இனிய திருமண வாழ்த்துக்கள்.
திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய நடிகை அம்பிகா மற்றும் சகா நடிகர் நரேஷ்