- Home
- Cinema
- Sun TV : வார வாரம் விஜய் படம் போட்டு TRP ஏத்தும் சன் டிவி... இந்த வாரம் என்ன படம் தெரியுமா?
Sun TV : வார வாரம் விஜய் படம் போட்டு TRP ஏத்தும் சன் டிவி... இந்த வாரம் என்ன படம் தெரியுமா?
Sun TV Sunday Movie : சன் டிவி மீண்டும் விஜய் படங்களை ஒளிபரப்ப தொடங்கி உள்ளதால், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும் தளபதியின் சூப்பர் ஹிட் படத்தை போட உள்ளனர்.

Vijay Movies in Sun TV
தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வந்தவர் விஜய். இவர் அரசியலுக்கு சென்றதும் சினிமாவில் இனி நடிக்கப் போவதில்லை என்கிற முடிவை எடுத்தார். இதனால் ரசிகர்கள் அப்செட் ஆக இருந்தாலும் விஜய் படங்களை இனி டிவியில் பார்த்து கொண்டாடலாம் என்கிற மனநிலைக்கு வந்தனர். ஆனால் அங்கு தான் ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் காத்திருந்தது. பெரும்பாலும் விஜய் படங்களை சன் டிவி தான் ஒளிபரப்பும். விஜய் நடித்த 69 படங்களில் கிட்டத்தட்ட பாதி படங்களுக்கு மேல் சாட்டிலைட் உரிமையை சன் டிவி தான் வாங்கி வைத்துள்ளது. அவரின் படங்கள் தான் சன் டிவிக்கு நல்ல டிஆர்பியையும் பெற்றுத் தந்தது.

விஜய் படத்தை ஒளிபரப்பாமல் இருந்த சன் டிவி
அப்படி இருக்கையில் தேர்தலுக்கு முன்பு வரை சன் டிவி, விஜய் படங்களை ஒளிபரப்பாமல் இருந்து வந்தது. படங்கள் மட்டுமின்றி சன் மியூசிக்கில் விஜயின் பாடல்களையும் ஒளிபரப்பவில்லை. சன் டிவி திமுகவின் ஆதரவு உடன் இயங்கி வரும் சேனல் என்பது அனைவரும் அறிந்ததே. விஜயோ அரசியலுக்கு வந்ததிலிருந்து தன்னுடைய ஒரே எதிரி திமுக தான் என பிரச்சாரம் செய்து வந்தார். அதன் காரணமாகவே சன் டிவி விஜய் படங்களை ஒளிபரப்பாமல் இருந்து வந்ததாக சர்ச்சை எழுந்தது. அதேபோல் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் சாட்டிலைட் உரிமை முதலில் சன் டிவி தான் வாங்குவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சன் டிவி ஜகா வாங்கியதால் அப்படம் ஜீ தமிழ் பக்கம் சென்றது.
மீண்டும் சன் டிவியில் விஜய் படங்கள்
தேர்தல் முடிந்து விஜயின் தமிழக வெற்றி கழகம் ஆட்சியை கைப்பற்றியது. தேர்தல் ரிசல்ட் வந்த பிறகு மீண்டும் விஜய் படங்களை சன் டிவி ஒளிபரப்பு தொடங்கியது. அந்த வகையில் கடந்த வாரம் விஜய் நடித்த போக்கிரி திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் சன் டிவியில் விஜய் படம் ஒளிபரப்பானதால் ரசிகர்களும் உற்சாகமடைந்தனர். அதற்குக் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த வாரமும் சன் டிவி விஜய் படத்தை வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. அது என்ன படம் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.
இந்த வாரம் என்ன படம்?
அதன்படி கடந்த 2016 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன தெறி திரைப்படம் தான் இந்த வாரம் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. தெறி திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருப்பார். கலைப்புலி தாணு தயாரித்த இப்படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா விஜயின் மகளாக நடித்திருப்பார். மேலும் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்த இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. தெறி திரைப்படம் நீண்ட இடைவேளைக்கு பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதால் அதனை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனால் இந்த வாரமும் சன் டிவியில் டிஆர்பி எகிர வாய்ப்புள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

