ராகவா லாரன்ஸ் கேட்ட பட்ஜெட்டால் தலைதெறிக்க ஓடிய சன் பிக்சர்ஸ்; கைமாறிய காஞ்சனா 4!
ராகவா லாரன்ஸ் இயக்க உள்ள காஞ்சனா 4 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருந்த நிலையில், தற்போது அப்படம் கைமாறி இருக்கின்றது.

காஞ்சனா ஹீரோ ராகவா லாரன்ஸ்
நடிகர், இயக்குனர், டான்ஸ் மாஸ்டர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கிய படங்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த படம் என்றால் அது காஞ்சனா தான். அப்படத்தின் முதல் பாகத்தை கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்டது. அதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை 2015-ம் ஆண்டு, மூன்றாம் பாகத்தை 2019-ம் ஆண்டு எடுத்து ரிலீஸ் செய்தார் லாரன்ஸ். இந்த மூன்று படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது.
உருவாகிறது காஞ்சனா 4
குறிப்பாக காஞ்சனா 2 மற்றும் 3ம் பாகங்கள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தன. இதனால் காஞ்சனா படத்தின் நான்காம் பாகம் எப்போது உருவாகும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அவர்களுக்கு குட் நியூஸ் கிடைத்துள்ளது. அந்த வகையில் காஞ்சனா படத்தின் நான்காம் பாகத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன. கஞ்சனா 3 படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் அதன் நான்காம் பாகத்தையும் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... போர் அடித்த பேய் படங்கள்; பான் இந்தியா படத்தில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ராகவா லாரன்ஸ்!!
காஞ்சனா 4ல் இருந்து வெளியேறிய சன் பிக்சர்ஸ்
ஆனால் தற்போது அதில் ட்விஸ்டாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அப்படத்தை தயாரிக்கும் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறதாம். அதற்கு காரணம் அப்படத்தின் பட்ஜெட் தான் என கூறப்படுகிறது. காஞ்சனா 4 திரைப்படத்தை சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம் லாரன்ஸ். ஆனால் பட்ஜெட்டை கேட்டதும் ஜகா வாங்கிய சன் பிக்சர்ஸ் நிறுவனம் 60 கோடி தான் தர முடியும் என டீல் பேசியதாம். அதற்கு லாரன்ஸ் நோ சொன்னதால் சன் பிக்சர்ஸ் அப்படத்தில் இருந்து விலகிவிட்டதாம்.
காஞ்சனா 4 நாயகி பூஜா ஹெக்டே
சன் பிக்சர்ஸ் நிறுவனம் விலகியதை அடுத்து கோல்டு மைன்ஸ் என்கிற பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் தற்போது காஞ்சனா 4 படத்தை 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க முன் வந்துள்ளதாம். இப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் பாலிவுட் கவர்ச்சி நடிகை நோரா பதேகியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
இதையும் படியுங்கள்... 'மாற்றம்' மூலம் விவசாயிகள் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவர ராகவா லாரன்சுடன் இணைந்து உதவும் எஸ். ஜே. சூர்யா!