MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பொங்கலுக்கு சர்ஃப்ரைஸ் வச்சிருக்கும் சன் பிக்சர்ஸ் - Announcement Teaser வருது: ஜெயிலர் 2 படமா?

பொங்கலுக்கு சர்ஃப்ரைஸ் வச்சிருக்கும் சன் பிக்சர்ஸ் - Announcement Teaser வருது: ஜெயிலர் 2 படமா?

Sun Pictures Next Movie Announcement Teaser : வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய படத்தின் அறிவிப்பு டீசரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Jan 12 2025, 08:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Sun Pictures Next Movie Announcement Teaser

Sun Pictures Next Movie Announcement Teaser

Sun Pictures Next Movie Announcement Teaser : ரஜினிகாந்த் மற்றும் விஜய் படங்களை அதிகளவில் தயாரித்து வந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய படத்தின் அறிவிப்பு டீசரையும் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தை தயாரித்தது. அதன் பிறகு சர்கார், பேட்ட, நம்ம வீட்டு பிள்ளை, காஞ்சனா 3, அண்ணத்த, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட், திருச்சிற்றம்பலம், ஜெயிலர், ராயன் என்று வரிசையாக பல படங்களை தயாரித்துள்ளது. இப்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், ரெபா மோனிகா ஜான், அமீர் கான், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி.

25
Rajinikanth's 171st film, Rajinikanth's 172 Movie, Jailer 2

Rajinikanth's 171st film, Rajinikanth's 172 Movie, Jailer 2

இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில் இன்னும் குறைவான பகுதிகள் மட்டும் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் பொங்கலுக்கு பிறகு படமாக்கப்படும் என்று தெரிகிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

35
Lokesh Kanagaraj, Rajinikanth, Thalaivar 171 Movie

Lokesh Kanagaraj, Rajinikanth, Thalaivar 171 Movie

இந்த நிலையில் தான் இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தனது 172ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் ஜெயிலர் படத்தின் 2ஆம் பாகம் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தையும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு, இதில் ரஜினிகாந்தின் ஜெயிலர் கதாபாத்திர காட்சிகள் இருக்கும் என்று தெரிகிறது.

45
Sun Pictures, Coolie, Coolie Release Date

Sun Pictures, Coolie, Coolie Release Date

எனினும் இது குறித்து முறையான அறிவிப்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் வெளியிடும் என்று தெரிகிறது. இது தொடர்பான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், சூப்பர் ஃபேன்ஸ், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு டீசர் ஒரு சில திரையரங்குகளில் மட்டும் வெளியாகும். அதுவும் சென்னை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், பெங்களூரு, திருவனந்தபுரம், பாலக்காடு, மும்பை ஆகிய ஊர்களில் உள்ள திரையரங்குளில் இந்த அறிவிப்பு டீசர் வெளியாகும். அதோடு தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டீசர் வெளியாக இருக்கிறது. மேலும் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு தான் இந்த அறிவிப்பு டீசர் வெளியாகிறது என்று அறிவித்துள்ளது. கொண்டாட தயாராக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

55
Jailer, Jailer 2, Nelson Dilipkumar

Jailer, Jailer 2, Nelson Dilipkumar

இது ரஜினிகாந்தின் படமாகத்தான் இருக்கும் என்று ஒவ்வொருவரும் இப்போதே கொண்டாட தொடங்கிவிட்டனர். அதோடு, அது ஜெயிலர் படத்தின் 2ஆம் பாகம் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வந்த படம் ஜெயிலர்.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, மிர்ணா மேனன், சுனில், விடிவி கணேஷ் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இவர்கள் தவிர தமன்னா, மோகன் லால், ஷிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், கிஷோர் ஆகியோர் பலரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட ரூ.220 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.650 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கூலி (ரஜினிகாந்த் திரைப்படம்)
கூலி (வெளியீட்டு தேதி)
ஜெயிலர் 2
லோகேஷ் கனகராஜ்
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரஜினிக்கு தேவா செதுக்கிய இசை சிம்மாசனம்! ரசிகர்களை துள்ளி குதிக்க வைத்த சூப்பர் ஸ்டாரின் 'மாஸ்' இன்ட்ரோ பாடல்கள்!
Recommended image2
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image3
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved