ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ஜெயிலில் இருந்தபடி காதல் பரிசு அனுப்பிய மோசடி மன்னன் சுகேஷ்!
மோசடி மன்னன் சுகேஷிடமிருந்து, பல கோடி மதிப்புள்ள ஜெட் விமானத்தை தற்போது மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்தபடியே அனுப்பியுள்ள தகவல் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்:
பாலிவுட் குயின், ஜாக்குலின் பெர்னாண்டஸ் (Jacqueline Fernandez) காதல் பரிசு தான் தற்போது பாலிவுட் திரையுலகின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. ஜாக்குலின் பெர்னாண்டஸ் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சிறைக்குச் சென்ற சுகேஷ் சந்திரசேகர் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், இருவரும் ஒன்றாக எடுத்து கொண்ட நெருக்கமான புகைப்படங்களே இதற்க்கு சாட்சி. அனால் காதல் உறவு குறித்து தொடர்ந்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் மௌனம் சாதித்து வருகிறார்.
ஜாக்குலினும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்:
சுகேஷ் வழக்கில், ஜாக்குலினின் பெயரும் அடிபட்டதால், விசாரணை அதிகாரிகள் பல வருடங்களாக இவரிடமும் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையின் போது ஜாக்குலினும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் சுரேஷ் சந்திரசேகரிடம் இருந்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் கோடிக்கணக்கான மதிப்புள்ள வைர நகைகள், ஹைடெக் குதிரை உள்ளிட்ட கணக்கே வராத பரிசுகளை கொடுத்ததாக கூறப்படுகிறது.
சொந்தமாக தனி தீவு... கோடி கோடியா சொத்து... மகாராணி போல வாழ வாழும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்!
கான்மேன் சுகேஷ் சிறப்பு பரிசு:
சுகேஷ் ஜெயிலுக்கு சென்றபின்னர், அவருக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் நடந்து கொள்ளும் ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு தொடர்ந்து கடிதங்கள் மூலமாகவும், பரிசு பொருட்கள் மூலமாகவும் தன்னுடைய காதலை சுகேஷ் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டதை தொடர்ந்து, கான்மேன் சுகேஷ் சிறப்பு பரிசு கொடுத்து, தன் காதலியின் மனதை மாற்றும் முயற்சியை மேற்கொண்டதாக தெரிகிறது. சிறையில் இருந்துகொண்டே இந்தப் பரிசை ஜாக்குலின் பெர்னாண்டஸ்-க்கு கொடுத்துள்ளார்.
ஜெட் விமானம்:
அதன்படி அவர் பல கோடி மதிப்புள்ள ஜெட் விமானம் ஒன்றை தான் காதல் பரிசாக வழங்கி உள்ளது. இத்துடன் அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், ‘அன்பே ஜாக்கி, இப்போதும் உன்னைப் பைத்தியம் போல் காதலிக்கிறேன். நமக்கு காதலர் தினம் மிகவும் முக்கியம், இந்த நாளில்தான் நம் உறவு தொடங்கியது’ என்று கூறியுள்ள சுகேஷ், இந்த வருடம் உனக்கு ஒரு Gulfstream ஜெட் விமானத்தை பரிசளிக்கிறேன். இதன் உள்ளேயும், வெளியேயும் உன் பெயரின் எழுத்துக்களான JAF என்று எழுதியுள்ளேன். வெவ்வேறு நாடுகளுக்குச் செல்லும்போது இதில்தான் போக வேண்டும் என்று கூறியுள்ள சுகேஷ், அவரின் பிறந்தநாளுக்கு ஏற்ற பதிவு எண்ணைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறையில் இருந்தபடியே காதலிக்கு பரிசுகளை அள்ளிக்கொடுத்த சுகேஷ் சந்திரசேகர்! லிஸ்ட் ரொம்ப பெருசு...
பாலிவுட் திரையுலகின் ஹாட் டாப்பிக்காக இது மாறியுள்ளது
இதுகுறித்த சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சுகேஷ் ஒரு மோசடி பேர்வழியாக இருந்தாலும், அவரின் காதல் உண்மையாக இருப்பதாக இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கடைசியாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் தெலுங்கில் பாலையாவுடன் டபடி டபடி என்கிற பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு தெறிக்க விட்டார். அதே போல், தமிழில் கடந்த 2023-ல் வெளியான 'லெஜெண்ட்' திரைப்படத்திலும் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.