- Home
- Cinema
- Suja Varuni: குழந்தை பெற்ற பின் 'த்ருஷ்யம் 2' படத்தில் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் சுஜா வருணி!
Suja Varuni: குழந்தை பெற்ற பின் 'த்ருஷ்யம் 2' படத்தில் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் சுஜா வருணி!
திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்னர், திரையுலகை விட்டு சற்று விலகியே இருந்த சுஜா வருணி தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

நடிகர் வெங்கடேஷ் , மீனா நடிப்பில் தயாராகி, தெலுங்கில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் 'த்ருஷ்யம் 2'. இப்படத்தில் நடிகை சுஜா வருணி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சிறிய இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் நடித்திருக்கும் இவர், தன்னுடைய தனித்துவமான நடிப்புத் திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் என தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, தன்னுடைய துணிச்சலான குணத்தையும், அன்பான பண்பு நலனையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை சுஜா வருணி.
திரையுலகில் பல வருடங்களாக தன்னை முன்னணி நடிகையாக நிலைநிறுத்திக்கொள்ள போராடி வந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு எந்த ஒரு அவப்பெயரும் வெளியேறியதால் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வெளியேறிய சில தினங்களில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரை காதலிப்பதாகும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறினார்.
திருமணத்திற்கு பின் குழந்தை பிறந்ததால் திரையுலகை விட்டு சற்று விலகியே இருந்தே... சுஜா வாருணி மீண்டும் திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வகிறார். அந்த வகையில், அவருடைய கடின உழைப்பிற்கு மீண்டும் அங்கீகாரமும், அடையாளமும் கிடைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
தெலுங்கில் வெளியாகியுள்ள 'த்ருஷ்யம் 2' படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார். இதன் மூலம் மீண்டும் அவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் அழுத்தமான வேடங்களில் நடிக்க தயாராகி இருக்கிறார் என்பது தெரிகிறது.
'த்ருஷ்யம் 2' படத்தில் நடித்ததைப் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க, தமிழிலும் வாய்ப்பு கிடைத்து வருவதால், அவர் விரைவில் தமிழிலும் மீண்டும் திரையுலகில் ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.