MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சூர்யாவை நம்பி கோடிக் கணக்கில் பணம் போட தயங்கும் தயாரிப்பாளர்கள் – டிராப்பாகும் ரூ.600 கோடி கர்ணா?

சூர்யாவை நம்பி கோடிக் கணக்கில் பணம் போட தயங்கும் தயாரிப்பாளர்கள் – டிராப்பாகும் ரூ.600 கோடி கர்ணா?

Suiya Next Movie Karna Dropped Due To Kanguva Reviews : கங்குவா படத்தின் இப்படியான விமர்சனங்களுக்கு பிறகு கர்ணா படம் கைவிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Nov 23 2024, 11:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Kanguva, Karna, Suiya Next Movie Karna Dropped Due To Kanguva Reviews

Kanguva, Karna, Suiya Next Movie Karna Dropped Due To Kanguva Reviews

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் சூர்யா. சினிமா பின்னணியிலிருந்து காலடி எடுத்து வைத்தவர். 1999 ஆம் ஆண்டு நேருக்கு நேர் படத்தில் ஆரம்பித்து இப்போது 2024ல் கங்குவா வரை வந்துள்ளார். இதில் எத்தனையோ வெற்றி படங்களும், தோல்வி படங்களும் உண்டு. ஆனால், கங்குவா அளவிற்கு விமர்சனங்களை எதிர்கொண்டதா என்று கேட்டால் இல்லை என்று கூட சொல்லலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Karna Movie, Karna Movie

Karna Movie, Karna Movie

உலக சினிமாவில் இப்போதைக்கு ஹாட் டாப்பிக் எது என்றால் அது சூர்யாவோட கங்குவா படம் தான். படம் ரிலீஸுக்கு முன்னாடியே படத்தை பற்றி பப்ளிச்சிட் கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தது. படம் அப்படி இருக்கு, இப்படி இருக்கு, ரூ.2000 கோடி வசூல் குவிக்கும் என்றெல்லாம் சூர்யா கங்குவா குறித்து புரோமோட் செய்தார். படம் வெளியான பிறகு தான் அவர் பேசுனத்துக்கும், படத்துக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருந்துருக்கு.

37
Kanguva, Bhaag Mikha Bhaag, Rakeysh Omprakash Mehra

Kanguva, Bhaag Mikha Bhaag, Rakeysh Omprakash Mehra

படமும் முதல் 20 நிமிடமும் ஓவரான சத்தத்துடன் இருந்துருக்கு. இது படம் முழுவதையும் தாக்கத்தை ஏற்படுத்தவே தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வந்தது. அதோடு, படத்தின் கதையும் சொல்லிக் கொள்ளுபடி பெரிதாக இல்லை என்று சொல்லப்படுகிறது. இன்னும் அழுத்தம் கொடுத்து எடுத்திருக்கலாம் என்று பலரும் பல விதமான விமர்சனங்களை முன் வைத்தனர்.

47
Kanguva Box Office Collection

Kanguva Box Office Collection

ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கங்குவா வெளியாகி இன்றுடன் 9 நாட்கள் ஆன நிலையில் முதல் 8 நாட்கள் வரையில் இந்தப் படம் ரூ.64.40 கோடி வரை மட்டுமே வசூல் குவித்திருக்கிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் படம் பிளாக்பஸ்டர் ஹிட் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் குறிப்பிட்டு வருகிறது. கங்குவாவிற்கு பிறகு அதனுடைய 2ஆம் பாகமும் வெளியாகும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருந்தார்.

57
Suriya Next Movie Karna Rs 600 Crore Budget

Suriya Next Movie Karna Rs 600 Crore Budget

கடைசியாக சிங்கம் 2 படம் தான் சூர்யாவிற்கு ஹிட் படமாக இருந்தது. அதன் பிறகு 11 ஆண்டுகளாக ஒரு ஹிட் படத்தை கூட கொடுக்காத சூர்யா இப்போது சூர்யா44 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு பிறகு வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்தப் படத்தை பால் மில்கா பாக் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அதோடு ரூ.600 கோடி பட்ஜெட் என்றும் படத்திற்கு கர்ணா என்று டைட்டில் கூட தேர்வு செய்து விட்டதாகவும் தகவல் வெளியானது.

67
Suriya Kanguva Box Office Collection, Karna Movie Dropped

Suriya Kanguva Box Office Collection, Karna Movie Dropped

மேலும், இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் திரௌபதி ரோலில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், இப்போது கங்குவா கொடுத்த பெரிய அடி அவருக்கு ஆப்பு வைத்துள்ளது. அவரை நம்பி ரூ.600 கோடி செலவு செய்ய எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லையாம். இதனால், கர்ணா படம் கிடப்பில் போடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக ஷாகித் கபூரின் புராணக் கதை படமான அஸ்வத்தாமா பட்ஜெட் காரணமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடியாம்.

77
Suiya Next Movie Karna Dropped Due To Kanguva Reviews

Suiya Next Movie Karna Dropped Due To Kanguva Reviews

கங்குவாவின் நெகட்டிவ் விமர்சனம் கர்ணா படத்தை பாதித்துள்ளது. இதுவே கங்குவா விமர்சனம ரீதியாகவும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றிருந்தால் கர்ணா படம் 2025 ஆம் ஆண்டே தொடங்கப்பட்டிருக்கும். ஆனால், இப்போது எல்லாமே தலைகீழா போச்சு. சூர்யா கையில் எந்த படமும் இப்போதைக்கு கையில் இல்லை. இதன் காரணமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த சூர்யா இப்போது தன்னுடைய மார்க்கை இழந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சூர்யா
 
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(43.0 ov)163/1
Day 3 - Session 1
Schedule ›
29th T20 • WBBLT20
HH-WHH-W
Sat, 21 Nov, 2026
ST-WST-W
06:30 am
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : டாஸ்கில் TTF வைத்த மெகா ட்விஸ்ட்... டிக்கெட் டூ பினாலே பில்டப் வீக்கில் வெற்றிவாகை சூடியது யார் தெரியுமா?
Recommended image2
Ashwin Kumar : பிளாக்பஸ்டர் இயக்குநரின் பேத்தியா இது... அஸ்வின் குமார் திருமணம் செய்த புவனேஸ்வரி யார் தெரியுமா?
Recommended image3
Sathyavan Savithiri Review : கீர்த்தி சுரேஷ் நடித்த சத்தியவான் சாவித்திரி பந்தயம் அடித்ததா? பல்பு வாங்கியதா? முழு விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved