இறுதி சுற்று, சூரரை போற்று படங்களை விட சிறப்பான படம் பராசக்தி: சுதா கொங்கரா!
Sudha Kongara Talks About Sivakarthikeyan's Parasakthi Movie : தான் இயக்கிய இறுதிசுற்று மற்றும் சூரரைப் போற்று படங்களை விட பராசக்தி படம் சிறந்த படமாக இருக்கும் என்று இயக்குநர் சுதா கொங்கரா கூறியுள்ளார்.

Sudha Kongara Talks About Sivakarthikeyan's Parasakthi Movie
Sudha Kongara Talks About Sivakarthikeyan's Parasakthi Movie : துரோகி படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அவதாரம் எடுத்தவர் இயக்குநர் சுதா கொங்கரா. அதன் பிறகு 6 ஆண்டுகளுக்கு இறகு இறுதிச் சுற்று என்ற படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். இதே போன்று கடந்த 2020 ஆம் ஆண்டு சூரரை போற்று படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். இப்போது பராசக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இது அவருடைய 25ஆவது படம். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ரவி மோகன், அதர்வா, தேவ் ராம்ராத் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். மேலும், ஸ்ரீலீலா இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
Parasakthi Movie
ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்படும் இந்த படத்திற்கு 73 ஆண்டுகளுக்கு முன்பு சிவாஜி கணேசன் நடித்து வெளியான பராசக்தி என்ற படத்தின் டைட்டில் வைக்கப்பட்டது. இதே போன்று விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் 25ஆவது படத்திற்கு தெலுங்கில் பராசக்தி என்று டைட்டில் வைக்கப்பட்டது. 2 படங்களின் டைட்டிலும் ஒரே மாதிரியாக இருப்பதால் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதோடு பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. இதற்கு ஏவிஎம் நிறுவனம், தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம், விஜய் ஆண்டனி தரப்பு என்று பலரும் அறிக்கை வெளியிட்டனர்.
Sivakarthikeyan Parasakthi
கடைசியாக டான் பிக்சர்ஸ் நிறுவனமும், விஜய் ஆண்டனியும் இணைந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தவே பராசக்தி பிரச்சனைக்கு முடிவு கட்டப்பட்டது. இதற்கு முன்னதாக சிவார்த்திகேயன் காக்கிசட்டை, எதிர்நீச்சல், வேலைக்காரன், மாவீரன், அமரன் என்று பழைய படங்களில் டைட்டிலில் நடித்துள்ளார். இதில் அமரன் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தான் இந்தப் படத்தை பற்றி இயக்குநர் சுதா கொங்கரா பேசியது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அவர் கூறியிருப்பதாவது: இறுதி சுற்று படத்தை விட 100 மடங்கு, சூரரை போற்று படத்தை விட 50 மடங்கு சிறந்த படமாக இருக்கும். இது அரசியல் பற்றி பேசும் படமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். இந்தப் படம் இந்தி எதிர்ப்பு கதையை மையப்படுத்திய கதையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.