- Home
- Cinema
- Dulquer Salmaan: நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை! என்ன காரணம்?
Dulquer Salmaan: நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை! என்ன காரணம்?
Dulquer Salmaan House Raid: பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான துல்கர் சல்மான் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் தற்போது திடீர் சோதனை நடத்தி வரும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மம்மூட்டியின் மகன் துல்கர்:
மலையாள திரை உலகில், சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் மம்மூட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மான் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகராக உள்ளார். 2012 ஆம் ஆண்டு, மலையாளத்தில் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான 'செகண்ட் ஷோ' என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி... முதல் படத்திலேயே திறமையான நடிகர் என பெயர் எடுத்தார்.
கேஜிஎஃப் 2 மற்றும் புஷ்பா 2 சாதனைகளை சல்லி சல்லியாய் நொறுக்கிய காந்தாரா சாப்டர் 1..!
துல்கரின் தமிழ் அறிமுகம்:
இதைத் தொடர்ந்து இவர் நடித்த உஸ்தாத் ஹோட்டல், தீவிரம், ஏ பி சி டி, 5 சுந்தரிகள், போன்ற மலையாள படங்கள் வரிசையாக நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் தமிழில் வாயை மூடி பேசவும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான துலுக்க சல்மான், தமிழ் - மலையாளத்தை தொடர்ந்து தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
‘கூலி’யில் ரஜினிக்கு கிடைக்காத ஒன்றை தட்டிதூக்கிய தனுஷின் 'இட்லி கடை' - செம குஷியில் ரசிகர்கள்
தயாரிப்பிலும் கலக்கும் துல்கர்:
நடிப்பை தாண்டி தயாரிப்பாளராகவும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் இதுவரை சுமார் 5-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். குறிப்பாக சமீபத்தில் இவர் தயாரிப்பில் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் வெளியான 'லோக சாப்டர் 1 சந்திரா' திரைப்படம் ரூ.200 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து 'காந்தா' என்கிற திரைப்படத்தையும் தயாரித்து அதில் ஹீரோவாக நடித்து வருகிறார் .
திருமணமான இரண்டே வருடத்தில் மனைவியை விவாகரத்து செய்கிறாரா இளம் நடிகர்? திரையுலகில் பரபரப்பு!
சுங்கத்துறை சோதனை ஏன் நடக்கிறது?
இந்நிலையில் திடீரென நடிகர் துர்க்கர் சல்மான் வீடு மற்றும் அலுவலகங்களில், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுவாக சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனை, வரி ஏய்ப்பு , கள்ளக் கடத்தல், சட்டவிரோத விற்பனை, ஆவணங்கள் சரிபார்ப்பு, இறக்குமதி ஆவணம் வரி ரசீது சரிபார்த்து, போன்ற காரணங்களுக்காக நடப்பது வழக்கம்.
துல்கர் சல்மான் வீட்டில் சோதனையின் காரணம்:
துல்கர் சல்மான் வீட்டில் இந்த சோதனை வரியைப்பு மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு சம்பந்தமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது . திடீரென துல்கர் சல்மான் வீட்டில் நடந்து வரும் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனை மலையாள திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.