- Home
- Cinema
- ‘ஃபர்சி’ டிரைலர் லாஞ்ச் : யங் லுக்கில் விஜய் சேதுபதி... கிளாமர் குயினாக வந்த ராஷி கண்ணா - வைரல் போட்டோஸ் இதோ
‘ஃபர்சி’ டிரைலர் லாஞ்ச் : யங் லுக்கில் விஜய் சேதுபதி... கிளாமர் குயினாக வந்த ராஷி கண்ணா - வைரல் போட்டோஸ் இதோ
ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கி இருக்கும் ஃபர்சி என்கிற வெப் தொடரின் டிரைலர் லாஞ்ச் நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழ் திரையுலகில் வில்லன், ஹீரோ, குணச்சித்திர வேடம் என அனைத்திலும் கலக்கி வரும் விஜய் சேதுபதி, தற்போது இந்தியில் ஃபர்சி என்கிற வெப் தொடரில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள முதல் வெப் தொடர் இதுவாகும்.
ஃபர்சி வெப் தொடரில் நடிகை ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். இவரும் தமிழில் விஜய் சேதுபதி உடன் துக்ளக் தர்பார், சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.
ஃபர்சி வெப் தொடரின் நாயகனாக பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாகித் கபூர் நடித்து இருக்கிறார்.
இந்த வெப் தொடரை சர்ச்சைக்குரிய இயக்குனர்களான ராஜ் மற்றும் டீகே ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். இவர் சமந்தா நடிப்பில் வெளியாகி சர்ச்சையில் சிக்கிய பேமிலி மேன் 2 வெப் தொடரை இயக்கியவர்கள் ஆவர்.
ஷாகித் கபூரும், விஜய் சேதுபதியும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ஃபர்சி வெப் தொடர் வருகிற பிப்ரவரி 10-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்த வெப் தொடரின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று மும்பையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி ஸ்டைலிஷ் லுக்கில் வந்து கலந்துகொண்டார்.
அதேபோல் நடிகை ராஷி கண்ணா, பளீச்சென இருக்கும் பச்சை நிற மாடர்ன் கவர்ச்சி உடையில் கிளாமர் குயினாக வந்து கலந்துகொண்டார். இதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.