சல்வார் போட்ட சொர்க்கமே... டால் அடிக்கும் அழகில் ஏர்போட் வந்த ராஷ்மிகா! லேட்டஸ்ட் போட்டோஸ் கேலரி!
நடிகை ராஷ்மிகா மெஜந்தா நிற சல்வாரில், ஏர்போர்ட்டில்... பேரழகியாக வலம் வந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மிக குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்து விட்ட நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, என தென்னிந்திய மொழிகளில் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார்.
தென்னிந்திய மொழி படங்களை விட பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர், தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக 'அனிமல்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். அதே போல், இவர் சித்தார்த் மல்ஹோத்தராவுக்கு... ஜோடியாக நடித்த மிஷன் மஞ்சு வெப் சீரிஸுக்கும் அதிக வரவேற்பு கிடைத்தது.
ரசிகர்கள் மனதை கவர்ந்த நேஷ்னல் கிரிஷ்ஷாக இருக்கும், ராஷ்மிகா மந்தானா... நேற்று புதிதாக தெலுங்கில் நடிக்க உள்ள படத்தின் பட பூஜைக்காக, மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு வந்தார்.
மெஜந்தா நிற சல்வாரில், செம்ம ஸ்டைலிஷாக ஏர்போர்ட்டில் வலம் வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ராஷ்மிகா மந்தனா.
சினிமாவில் அட்ஜஸ்ட்மெட் பிரச்சனை இருக்கு..! தன்னுடைய அனுபவம் குறித்து பேசிய பிரியா பவானி ஷங்கர்..!
நிதினுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ள இந்த படத்தை, வெங்கி குடுமுலா இயக்குகிறார். மைத்திரேயி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சிரஞ்சீவி கிளப் அடித்து துவங்கி வைத்தார்.
இயக்குநர் பாபி கேமராவை சுவிட்ச் ஆன் செய்தார். கோபிசந்த் மலினேனி முதல் காட்சியை இயக்கினார். ஹனு ராகவபுடி மற்றும் புச்சிபாபு சனா ஆகியோர் ஸ்கிரிப்டை தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்க உள்ள படத்தின் படப்பிடிப்பு விழாவில்... எடுக்க பட்ட புகைப்படங்கள் ஒருபக்கம் வைரலாக நிலையில்... ராஷ்மிகாவின் ஏர்போர்ட் புகைப்படமும் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.