MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஜெயிலர் படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தது இந்த சின்ன பையனா! யார் இந்த கெவின் குமார்?

ஜெயிலர் படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தது இந்த சின்ன பையனா! யார் இந்த கெவின் குமார்?

தந்தை வழியில் ஸ்டண்ட் இயக்குனராக அறிமுகமாகும் ஸ்டன் சிவாவின் மகன் கெவின் குமாரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 12 2023, 01:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்களில் ஒருவர் ஸ்டன் சிவா. கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் ஸ்டண்ட் துறையில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்து வரும் ஸ்டன் சிவா இன்று தென்னிந்திய திரையுலகில் உள்ள பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் சண்டை காட்சிகளை வடிவமைத்து வருகிறார். அதுமட்டுமல்ல ஒவ்வொரு சண்டைக்காட்சியையும் வித்தியாசமான முறையில் ரசிகர்கள் விரும்பி ரசிக்கும் வகையிலும், படத்தின் கதை ஓட்டத்திற்கு ஏற்றார்போலவும் வடிவமைப்பதில் வல்லவர்.

24

சமீபத்தில் வெளியான ருத்ரன், விடுதலை, கஸ்டடி ஆகியவை இவர் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிய படங்கள் தான். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ஜெயிலர் படத்திலும் சண்டைக் காட்சிகளை ஸ்டன் சிவா தான் வடிவமைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது ஸ்டன் சிவாவின் மகன் கெவின் குமார் விரைவில் ஸ்டண்ட் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். 

இதையும் படியுங்கள்... என் பாடல் வரிக்கா கத்திரி போடுறீங்க! சென்சார் போர்டுக்கே தண்ணி காட்டி.. நா.முத்துக்குமார் செய்த தரமான சம்பவம்

34

கடந்த பல வருடங்களாகவே தனது தந்தையுடன் இணைந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஆக்சன் காட்சிகளில் பணியாற்றியதுடன் அதன் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டுள்ளார் கெவின் குமார். கடந்த வருடம் தெலுங்கில் வெளியான பாலகிருஷ்ணா நடித்த ‘அகாண்டா’ மற்றும் தற்போது தயாராகி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் ஆகிய படங்களில் ஒருசில சண்டைக் காட்சிகளை தானே வடிவமைத்துள்ளார் கெவின் குமார்.

44

சண்டைக் காட்சிகளை இவர் வடிவமைத்த நேர்த்தியை பார்த்து வியந்துபோன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரை பாராட்டி உள்ளதுடன் எதிர்காலத்தில் தமிழ் சினிமாவில் சிறந்த ஸ்டண்ட் இயக்குனராக வரவேண்டும் என தனது ஆசிகளையும் வழங்கியுள்ளார். ஸ்டன் சிவா இதுவரை பணியாற்றி வந்த முன்னணி நிறுவனங்கள் சிலவற்றில் கெவின் குமாரை ஸ்டண்ட் இயக்குனராக அறிமுகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும்.

இதையும் படியுங்கள்... குறும்பா என் உலகே நீதான்டா! கியூட் போட்டோஸுடன் செல்ல மகன் குகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய் முன்னே ரஷ்மிகாவிடம் ரக்ஷித் ஷெட்டி குறித்து கேள்வி – வைரலான ரியாக்ஷன் வீடியோ
Recommended image2
அப்பாடி.! அரண்மனை இப்படித்தான் இருக்குமோ?! திரும்பி பார்க்க வைக்கும் விஜய் தேவரகொண்டாவின் ஆடம்பர வீடு!
Recommended image3
சிவாஜிக்கு ஒரு குரல்.. எம்.ஜி.ஆருக்கு ஒரு குரல்! நடிகர்களுக்காகவே குரலை மாற்றிய டி.எம்.எஸ் - வியக்க வைக்கும் ரகசியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved