MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முதல் படத்திலேயே ரஜினியை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்கி... தலைவரையே ஓவர்டேக் செய்த ஹீரோயின் யார் தெரியுமா?

முதல் படத்திலேயே ரஜினியை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்கி... தலைவரையே ஓவர்டேக் செய்த ஹீரோயின் யார் தெரியுமா?

பிரபல நடிகை ஒருவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான முதல் படத்திலேயே ரஜினிகாந்தை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்கினாராம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 08 2023, 03:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இந்திய திரையுலகிற்கே சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். அவருக்கு தற்போது 72 வயது ஆன போதிலும் இன்றளவும் அதே சுறுசுறுப்போடு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர் வரிசை கட்டி நிற்கின்றனர். அவர் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இரு தினங்களில் ரிலீஸ் ஆக உள்ளது. அதற்கான முன்பதிவிலேயே பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இவ்வளவு பெரிய உச்சத்தை தொட நடிகர் ரஜினிகாந்த் அவ்வளவு எளிதில் வளர்ந்துவிடவில்லை. ஆரம்ப காலகட்டத்தில் அவர் சந்திக்காத பிரச்சனைகளே இல்லை. அதையெல்லாம் கடந்து தான் இன்று மிகப்பெரிய நடிகராக உயர்ந்து நிற்கிறார். பஸ் கண்டக்டராக இருந்த ரஜினிகாந்த் சினிமாவுக்குள் வந்தது ஒரு எதிர்பாரா நிகழ்வாக இருந்தாலும், அதன்பின் அதில் முன்னேற அவர் செய்த கடின உழைப்பு தான் இன்று இந்த அளவுக்கு உயரத்தை தொட வைத்துள்ளது.

இதையும் படியுங்கள்... 72 வயதிலும் இவ்வளவு அழகா... ஜெயிலர் ரஜினியின் கெத்தான போட்டோஸ் இதோ

35

இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் நிச்சயம் ரஜினிகாந்தின் பெயர் டாப் 5 இடத்துக்குள் இருக்கும் அவர் தற்போது ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார். தற்போது இவ்வளவு சம்பளம் வாங்கும் ரஜினி, ஆரம்ப காலகட்டத்தில் அறிமுக ஹீரோயினை விட கம்மியான சம்பளம் வாங்கி இருக்கிறார். அந்த நடிகை வேறு யாருமில்லை, ஸ்ரீதேவி தான்.

45

நடிகை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரம் முதல் சினிமாவில் நடித்து வருகிறார். குழந்தையாக நடித்தபோது இருந்த அதே மவுசுடன் தான் ஹீரோயினாக அறிமுகமானார் ஸ்ரீதேவி, அவர் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் மூன்று முடிச்சு. கே.பாலச்சந்தர் இயக்கிய இப்படத்தில் ஸ்ரீதேவி உடன் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவருமே நடித்திருப்பார்கள்.

55

இந்த படத்தில் நடிக்க தான் நடிகை ஸ்ரீதேவி ரஜினியை விட டபுள் மடங்கு அதிகம் சம்பளம் வாங்கி இருக்கிறார். இப்படத்திற்காக ரஜினிக்கு ரூ.2 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஸ்ரீதேவிக்கோ ரூ.5 ஆயிரம் வழங்கி இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் மிஞ்சும் வகையில் நடிகர் கமல்ஹாசன் ரூ.30 ஆயிரம் சம்பளம் வாங்கி இருக்கிறாராம். அப்போது புதுமுகமாக இருந்த ரஜினிக்கு அனுபவமிக்க நடிகரான கமலைப்போல் ரூ.30 ஆயிரம் சம்பாதிக்க ஆசைப்பட்டாராம். இந்த சுவாரஸ்ய தகவலை நடிகை ஸ்ரீதேவி, பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கிய நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... மொட்டை பாஸ் லுக்கில் மிரட்டும் பகத் பாசில்... ‘புஷ்பா 2’ படக்குழுவின் டெரரான பர்த்டே சர்ப்ரைஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்
ஸ்ரீதேவி
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved