மொட்டை பாஸ் லுக்கில் மிரட்டும் பகத் பாசில்... ‘புஷ்பா 2’ படக்குழுவின் டெரரான பர்த்டே சர்ப்ரைஸ்
பகத் பாசில் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரின் மொட்டைபாஸ் லுக்கை புஷ்பா படக்குழு வெளியிட்டு வாழ்த்தி உள்ளது.
சுகுமார் இயக்கத்தில் பான் இந்தியா படமாக கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்த இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடித்திருந்தார். செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலை அள்ளி மாஸ் ஹிட் ஆனது.
புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. புஷ்பா தி ரூல் என்கிற பெயரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளுக்கு ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிறச் செய்தது.
இதையும் படியுங்கள்... ஹீரோ டூ வில்லன்... அசுர வளர்ச்சி கண்ட நடிகர் பகத் பாசிலின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
இந்நிலையில், இன்று புஷ்பா படத்தில் வில்லனாக நடித்து வரும் பகத் பாசில் தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடி வருவதால், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவரின் பன்வர் சிங் ஷெராவத் கேரக்டரின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கூலிங் கிளாஸ் அணிந்து சிகரெட் பிடித்தபடி மொட்டைத் தலையுடன் மாஸ் லுக்கில் இருக்கும் பகத் பாசிலின் இந்த போஸ்டர் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே மாமன்னன் படத்தில் பகத் பாசில் நடித்த ரத்னவேல் என்கிற கேரக்டரை ரசிகர்கள் தடபுடலாக கொண்டாடி வரும் நிலையில், புஷ்பா 2 படத்திலும் அவர் வில்லனாக நடித்து வருவதால், அதில் இடம்பெறும் அவரது பன்வர் சிங் ஷெராவத் கேரக்டரை பான் இந்தியா அளவில் கொண்டாடுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... மலையாள மாஸ் ஹீரோ... தமிழ்நாட்டில் பேமஸ் ஆனது எப்படி? பகத் பாசில் நடித்த தரமான தமிழ் படங்கள் - ஒரு பார்வை