எஸ்.பி.பி எப்படி பட்டவர் தெரியுமா? நல்ல செய்திக்கு மருத்துவமனை வாசலில் காத்து கிடக்கும் ஓட்டுநர் உருக்கம்!
இந்நிலையில் எஸ்.பி.பி யிடம் சுமார் 15 வருடங்களாக ஓட்டுநராக வேலை செய்து வரும் நபர், எஸ்.பி.பி உடல் குணமடைந்தால் போதும் என மருத்துவமனை வாசலிலேயே காத்து கிடக்கிறார்.
பாடகராக மட்டும் இன்றி, தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் எஸ்.பி.பி. இசை உலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் என்று இவரை கூறினால் அது மிகையில்லை. கேளடி கண்மணி, மற்றும் அமர்க்களம் படத்தில் மூச்சி விடாமல் இவர் பாடி பாடல்களை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.
அதே போல் 24 மணிநேரத்தில், 27 பாடல்களை பாடி சாதனை படைத்தவர். இதுவரை கிட்ட தட்ட 16 மொழிகளை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இதனால் இவருக்கு உலக அளவில் பலர் ரசிகர்கள் உள்ளனர்.
ஒரு பாடகராகவும், நடிகராகவும் மட்டுமே ரசிகர்களால் பார்க்கப்படும் எஸ்.பி.பி பற்றியும் அவருடைய குணாதிசயங்கள் பற்றியும் ரசிகர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்நிலையில் எஸ்.பி.பி யிடம் சுமார் 15 வருடங்களாக ஓட்டுநராக வேலை செய்து வரும் நபர், எஸ்.பி.பி உடல் குணமடைந்தால் போதும் என மருத்துவமனை வாசலிலேயே காத்து கிடக்கிறார்.
இவர் பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில்... தான் அவரிடம் வேலைக்கு சேர்ந்ததில் இருந்து, ஒரு முறை கூட அவர் தன்னிடம் பாகுபாடு பார்த்தது இல்லை என அவருடைய நல்ல மனம் குறித்து பேசியுள்ளார்.
மேலும் அந்த ஆண்டவன் நல்லபடியாக அவருடைய உடல் நிலையை தேற்றி, குணப்படுத்தினாலே போதும் என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.
இதே நேரத்தில் ரசிகர்கள், பிரபலங்கள், சாமானியர்கள் என பலரும் எஸ்.பி.பி உடல் நலம் தேறி வர தொடர்ந்து தங்களுடைய பிராத்தனையை செய்து வருகிறார்கள்.