MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அச்சச்சோ... சினிமாவை விட்டு விலக முடிவெடுத்த தளபதி விஜய்! அப்போ கடைசி படம் இதுதானா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

அச்சச்சோ... சினிமாவை விட்டு விலக முடிவெடுத்த தளபதி விஜய்! அப்போ கடைசி படம் இதுதானா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் விஜய், சினிமாவை விட்டு விலக உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jun 19 2023, 10:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
vijay

vijay

தமிழ் திரையுலகில் விடாமுயற்சியால் முன்னேறிய நடிகர்களுள் நடிகர் விஜய்யும் ஒருவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கும் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால் அவர் நடிக்கும் படங்கள் தற்போது பான் இந்தியா அளவில் ரிலீஸ் செய்யப்பட்டு பிற மாநிலங்களிலும் பட்டைய கிளப்பி வருகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
vijay

vijay

தற்போது நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படம் வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. லியோ பட ஷூட்டிங் முடிந்ததும், அடுத்ததாக விஜய் நடிப்பில் தளபதி 68 திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளார்.

36
vijay

vijay

இப்படி ஷூட்டிங்கில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், மறுபுறம் அரசியல் பணிகளையும் சைலண்டாக செய்து வருகிறார் விஜய். அவரின் சமீபத்திய நகர்வுகள் அனைத்தும் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளன. குறிப்பாக நேற்று நடத்த பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவே அவரின் அரசியல் பிரவேசத்தின் பிள்ளையார் சுழி என சொல்லலாம்.

இதையும் படியுங்கள்... அம்பேத்கர், காமராஜர், பெரியார் மட்டுமில்ல இவரை பற்றியும் படிக்கனும் - விஜய்யின் பேச்சுக்கு வெற்றிமாறன் பதில்

46
vijay

vijay

அந்த அளவுக்கு அந்த விழாவில் விஜய்யை புகழ்ந்து பேசிய பலரும் அவரின் அரசியல் வருகைக்காக காத்திருப்பதாக கூறினர். விஜய்யும் தன்னுடைய பேச்சில் லைட்டாக அரசியல் வருகைக்கு ஹிண்ட் கொடுத்திருந்தார். இதையெல்லாம் பார்க்கும் போது அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் விஜய் அரசியலில் நுழையலாம் என சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

56
vijay

vijay

ஆனால் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால், வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளதாகவும், அவர் அரசியல் கட்சி தொடங்கி அதற்காக வேலைகளை செய்ய உள்ளதால், வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள தளபதி 68 தான் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

66
vijay

vijay

தளபதி 68 படத்தில் நடித்து முடித்த பின்னர் அரசியல் வேலைகளை ஆரம்பிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், அரசியலில் நுழைந்துவிட்டால் சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் அவர் நடிப்பை நிறுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... நண்பா, நண்பிகளுக்காக விஜய் என்னென்ன செஞ்சிருக்காரு பாருங்க... தளபதியின் கியூட் மொமண்ட்ஸ் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
Samantha : ஹேட்டர்ஸ்-க்கு சமந்தா கொடுத்த 'ஸ்வீட்' பதிலடி... சாய் பல்லவி பற்றி சொன்ன டாப் சீக்ரெட்!
Recommended image2
Swasika : கணவரைப் பற்றி உல்டா பேச்சு... கருப்பு பட நடிகையை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
Recommended image3
Parimala and Co vs Blast Box Office : பரிமளா அண்ட் கோ-வை விட டபுள் மடங்கு வசூல் அள்ளிய பிளாஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved