நண்பா, நண்பிகளுக்காக விஜய் என்னென்ன செஞ்சிருக்காரு பாருங்க... தளபதியின் கியூட் மொமண்ட்ஸ் இதோ

பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளுக்காக நடிகர் விஜய் நடத்திய விழாவில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் பற்றிய வீடியோ தொகுப்பை தற்போது காணலாம்.

Actor vijay cute moments in education award ceremony

தமிழ்நாடு முழுவதும் தற்போது ஹாட் டாப்பிக் ஆக இருப்பது நடிகர் விஜய்யின் கல்வி ஊக்கத்தொகை விழா தான். வழக்கமாக தனது படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் மட்டும் கலந்துகொள்ளும் விஜய், முதன்முறையாக பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தார். 

இந்த விழா 13 நேரம் நடந்தாலும், அதில் சிறிதும் முகம் சுழிக்காமல் ரசிகர்கள் தன்னிடம் என்னென்ன கேட்கிறார்களோ அதையெல்லாம் செய்து அவர்களை மகிழ்வித்தார் விஜய். ரசிகர்களுக்காக விஜய் என்னென்ன செய்தார், என்பது குறித்த வீடியோ காட்சிகள் அடங்கிய சிறப்பு தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

நடிகர் விஜய்யிடம் பரிசு வாங்க வந்த 10-ம் வகுப்பு மாணவன் ஒருவனின் பெற்றோர் விஜய்யுடன் சேர்ந்து கையை உயர்த்து வெற்றி நமதே என போஸ் கொடுத்த அழகிய தருணம் இது.

விஜய்யிடம் பரிசு வாங்க வந்த மாணவி ஒருவர், தனது தங்கையுடன் சேர்ந்து விஜய்க்காக தலைவா படத்தில் இடம்பெறும் பாடலை பாடி மெய்சிலிர்க்க வைத்த தருணம் இது.

பொதுவாகவே நடிகர் விஜய்க்கு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே, அதனை நேற்றைய நிகழ்ச்சியிலும் காண முடிந்தது. அதுகுறித்த அழகிய வீடியோ தான் இது.

நடிகர் விஜய்யை அருகில் பார்த்ததும் வியந்து பார்த்த மூதாட்டி ஒருவர், அவருக்கு கண்ணத்தில் முத்தம் கொடுத்த அழகிய தருணம் இது.

நேற்றைய நிகழ்ச்சி முடிய நேரம் ஆனதால், இரவு உணவு தயார் செய்தவுடன் வந்திருந்தவர்களை பார்த்து சாப்பிட செல்லுமாறு மேடையில் இருந்தே உபசரித்தார் விஜய்.

நடிகர் விஜய்யே ஜெர்க் ஆன தருணம் தான் இது. மாணவன் ஒருவன் திடீரென கராத்தே ஸ்டெப்களை போட்டு தளபதியை மெர்சலாக்கிய தருணம் இது.

13 நேரமாக நின்று கொண்டிருந்த நடிகர் விஜய், ஒரு கட்டத்தில் கால் வலி தாங்க முடியாமல் அங்கிருந்த மேசையில் சாய்ந்தார். அந்த வீடியோ தான் இது.

விஜய்யை வாழ்த்தும் விதமாக அவரை அருகில் அழைத்து அவருக்கு மூதாட்டி ஒருவர் முத்தமிட்ட அழகிய தருணம் தான் இது.

நடிகர் விஜய்யின் பொறுமையையும், அவரின் அன்பு மற்றும் அரவணைப்பை பார்த்து வியந்து போன மாணவி ஒருவர் மேடையில் நெகிழ்ந்து பேசிய தருணம் இது.

பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு என சொல்ல வைக்கும் வீடியோ தான் இது. நடிகர் விஜய்க்கு அவரது குட்டி ரசிகைகள் சொல்லிக்கொடுத்த கியூட் போஸ் இது.

நடிகர் விஜய்யின் கியூட்டான தருணங்களை தொகுத்து ரசிகர்கள் உருவாக்கிய ஸ்பெஷல் வீடியோ தான் இது.

நடிகர் விஜய்க்கு மாணவியின் தந்தை ஒருவர் கோவில் விபூதியை பூசி விட்டார். எம்மதமும் சம்மதம் என இருக்கும் விஜய், அவரின் இந்த பரிசை அன்புடன் ஏற்றுக்கொண்ட தருணம் இது.

நடிகர் விஜய் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும், அப்படி அங்கு விஜய்யை காண வந்த குழந்தை ஒருவர், சட்டென அவரது மடியில் அமர்ந்து அவருக்கு அழகாக முத்தமிட்ட தருணம் இது.

13 மணிநேரம் பொறுமையாக காத்திருந்து அனைத்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய விஜய், இறுதியாக ரஞ்சிதமே ஸ்டைலில் முத்தமிட்டு விடைபெற்ற கியூட்டான தருணம் இது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios