கொரோனா குமார் படத்தை கைவிடும் முடிவில் சிம்பு..! அப்போ அடுத்த படம் யாருடன்?
கோகுல் இயக்கத்தில் உருவாக இருந்த கொரோனா குமார் படத்தை சிம்பு கைவிடும் முடிவுக்கு வந்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
நடிகர் சிம்புவின் கெரியரை கொரோனாவுக்கு முன்.. கொரோனாவுக்கு பின் என பிரித்து விடலாம். அந்த அளவுக்கு டோட்டலாக மாறி உள்ளது. கொரோனா ஊரடங்குக்கு முன்பு வரை உடல் எடை அதிகரித்து கைவசம் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த சிம்பு, கொரோனா ஊரடங்கு சமயத்தில் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனார்.
அதன்பின் அவரது கெரியர் அசுர வளர்ச்சி கண்டது. தொடர்ந்து மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த சிம்பு, தற்போது ஒபிலி கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதன்பின் கொரோனா குமார் படத்தில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... இதென்னப்பா பகல் கொள்ளையா இருக்கு... தலைசுற்ற வைக்கும் அவதார் 2 படத்தின் டிக்கெட் விலை - புலம்பும் நெட்டிசன்கள்
ஆனால் பத்து தல படத்தின் ஷூட்டிங்கை முடித்ததும் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளாராம் சிம்பு. அங்கு சில நாட்கள் தங்கி ஓய்வெடுத்துவிட்டு தன் அடுத்த பட பணிகளை தொடங்க உள்ளாராம். அவரது அடுத்த படம் கொரோனா குமார் இல்லை என்று கூறப்படுகிறது. சுதா கொங்கரா அல்லது ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரில் ஒருவர் தான் சிம்புவின் அடுத்த பட இயக்குனராக இருப்பார்கள் என கூறப்படுகிறது.
இதன்மூலம் கொரோனா குமார் படத்தை சிம்பு கைவிடும் முடிவுக்கு வந்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுல் இயக்க இருந்த இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாக கடந்தாண்டே அறிவிப்பு வெளியானது. ஆனால் அதன்பின் இப்படம் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... எந்த தியேட்டரும் ஒதுக்கல! துணிவு & வாரிசு படத்தின் உண்மை நிலவரத்தை புட்டுபுட்டு வைத்த திருப்பூர் சுப்பிரமணியம்