MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சூரியின் அடுத்த படம்; ஹீரோயினாக நடிக்க ஓகே சொன்ன பொன்னியின் செல்வன் நாயகி

சூரியின் அடுத்த படம்; ஹீரோயினாக நடிக்க ஓகே சொன்ன பொன்னியின் செல்வன் நாயகி

Soori Next Movie Heroine : விடுதலை படத்துக்கு பின் நாயகனாக பிசியாகி உள்ள சூரி, அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக பொன்னியின் செல்வன் பட நடிகை நடிக்க உள்ளாராம்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 10 2024, 07:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Soori Next Movie Heroine

Soori Next Movie Heroine

ஹீரோ சூரி

தமிழ் திரையுலகில் காமெடியனாக கலக்கி வந்தவர் சூரி, அவர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்தார். விடுதலை படத்தின் வெற்றிக்கு பின்னர் அவருக்கு ஹீரோ வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்து வருகின்றன. அதை நன்றாக பயன்படுத்திக்கொள்ளும் சூரி, கருடன், கொட்டுக்காளி என இரண்டு ஹிட் படங்களை கொடுத்துவிட்டார். அதிலும் கொட்டுக்காளி திரைப்படம் உலகளவில் திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Viduthalai soori

Viduthalai soori

விடுதலை 2

தற்போது அவர் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வெற்றிமாறன் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 20ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. விடுதலை 2 படத்திற்கான புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ளார் சூரி. இதைத் தொடர்ந்து பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி ஒரு படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ், விமல் நடித்த விலங்கு என்கிற வெப் தொடரை இயக்கியவர் ஆவார்.

இதையும் படியுங்கள்... வசூல் வேட்டையில் 'புஷ்பா 2'! 4 நாட்களில் 2.0 லைப் டைம் வசூலை காலி செய்த அல்லு அர்ஜுன்!

34
Soori Next Movie

Soori Next Movie

சூரியின் அடுத்த பட ஹீரோயின்

இப்படத்திற்காக அதிகளவில் தாடி வளர்த்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார் சூரி. இந்நிலையில், இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிக்க உள்ளது யார் என்கிற அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சமுத்திரக்குமாரி பூங்குழலியாக நடித்திருந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தான் இதில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். இப்படத்தின் மூலம் முதன்முறையாக சூரியும் ஐஸ்வர்யாவும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

44
Aishwarya Lekshmi

Aishwarya Lekshmi

சூரிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா லட்சுமி

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, சுந்தர் சி இயக்கிய ஆக்‌ஷன் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்த அவருக்கு பொன்னியின் செல்வன் படம் தான் திருப்புமுனையாக அமைந்தது. தற்போது மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் தக் லைஃப் படத்திலும் நடித்து முடித்துள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி. இப்படம் வருகிற 2025ம் ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... புஷ்பா 2-வை புரட்டி எடுக்க; இந்த வாரம் இத்தனை தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகிறதா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூரி (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Karuppu : ரிலீஸ் ஆகாத கருப்பு... கண்ணீர்விட்டு அழுதபடி ஆர்.ஜே.பாலாஜி..!
Recommended image2
Now Playing
Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?
Recommended image3
Now Playing
Karuppu Movie First Show Cancelled! 😱 சூர்யா ரசிகர்களுக்கு இடியை இறக்கிய தயாரிப்பாளர்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved