“வேட்டி, சட்டை போட்டாலே தனி கெத்து தான்டா”... முரட்டு தாடியுடன் மிரட்டலாக போஸ் கொடுத்த நடிகர் சூரி...!
First Published Dec 19, 2020, 11:52 AM IST
இந்த போட்டோக்களுடன் “என்னதான் t shirt-u jeans nu போட்டாலும் வேட்டி சட்ட போட்டாலே தனி கெத்துதான்டா” என ட்வீட் செய்துள்ளார். தற்போது இந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தற்போது தமிழ் சினிமாவின் டாப் காமெடி நடிகராக வலம் வரும் சூரி, சென்னைக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த காலத்தில் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. லாரி கிளீனர், பெயிண்ட்டர் என பல வேலைகளை செய்திருக்கிறார்.

சினிமாவில் கிடைத்த சின்ன சின்ன வாய்ப்புகளை கூட பயன்படுத்தி வந்த சூரிக்கு, சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மிகப்பெரிய உச்சாணியாக அமைந்தது. ஒரே ஒரு பரோட்டா காமெடி மூலம் பரோட்டோ சூரி என ரசிகர்களால் இன்றளவும் அழைக்கப்படுகிறார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?