'தப்பு செய்தவர்கள் தப்ப முடியாது' வழக்கு தொடர்ந்து மார்தட்டும் நடிகர் சூரி..
சென்னையை அடுத்த சிறுசேரியில் தனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாக, டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீது நடிகர் சூரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

soori
பல்வேறு கஷ்டங்களை கடந்து காமெடி நடிகராக உயர்ந்து இன்று ஹீரோவாக மாறி இருக்கிறார் சூரி. தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் இவர் அடுத்துள்ள லூட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது.
soori
வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான சூரி தற்போது வெற்றி மாறன் நாயனாக விடுதலை’ என்கிறபடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
soori
படிப்படியாக முன்னேறி வரும் சூரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதாவது தனக்கு இடம் வாங்கி தருவதாக கூறி நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் மீது புகார் கொடுத்திருந்தார்.
soori
சென்னையை அடுத்த சிறுசேரியில் தனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி தன்னிடம் பண மோசடி செய்துவிட்டதாக கூறி வழக்கு தொடர்ந்துள்ள சூரி இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில் பேசியுள்ளார்.
soori
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததை அடுத்து மீடியாக்கள் மத்தியில் பேசிய சூரி, இந்த வழக்கில் முதலில் அடையாறு காவல் நிலையத்தில் நடந்து கொண்டிருந்தது. திருப்திகரமாக விசாரணை நடைபெறவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தேன். அதையடுத்து தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடக்கிறது என்று கூறினார்.
soori
மேலும் நிச்சயமாக எனக்கு இந்த வழக்கில் நியாயம் கிடைக்கும். நீதிமன்றத்தையும் காவல்துறையையும் மட்டுமே நான் நம்பி இருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. காவல் துறையினர் எப்போது அழைத்தாலும் நேரில் ஆஜராகி பதில் கொடுத்து வருகிறேன் என்று கூறியுள்ளார் சூரி.
soori
அதோடு கட்டாயமாக தப்பு செய்தவர்கள் இந்த வழக்கில் இருந்து தப்பிக்கவே முடியாது என்று மனா உறுதியுடன் தெரிவித்துள்ளார் நடிகர் சூரி..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.