அட..சூப்பர்ல..இரண்டு வருடம் ஆகியும் மவுசு குறையலையே..சூர்யா பாடலின் மாஸ் வெற்றி..எத்தனை மில்லியன் தெரியுமா?..
சூர்யாவில் சூரரைப் போற்றி பட காட்டுப் பயலே பாடல் யூட்யூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது .
soorarai pottru
ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘சூரரைப்போற்று’ (soorarai pottru).
soorarai pottru
கொங்கரா இயக்கத்தில் சூர்யா (Suriya), அபர்ணா முரளி, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருந்த இத்திரைப்படம், கடந்தாண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது
soorarai pottru
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. ஒருவேளை இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தால் வேற லெவலுக்கு வசூல் சாதனை படைத்திருக்கும் என திரைப்பட விமர்சகர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்திருந்தனர்
soorarai pottru
தியேட்டரில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக திரையரங்க உரிமையாளர்களோ ஓடிடி-யில் வெளியான படங்களை தியேட்டரில் வெளியிட மாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்தனர்.
soorarai pottru
இந்த படத்தை வெளியிட தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்தாலும், கேரள திரையரங்கு உரிமையாளர்கள் இப்படத்தை வெளியிட முன்வந்தனர்.
soorarai pottru
சூரரைப் போற்று (soorarai pottru) படத்தின் சிறப்பு காட்சிகள் திருவனந்தபுரத்தில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டது. கூட்டம் கூட்டமாக வந்து ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வந்தனர். இதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
soorarai pottru
சூர்யாவின் முந்தைய படமான சூரரைப் போற்று படத்திற்கு மேலும் ஒரு மகுடமாக இந்தப் படம் மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறந்த இந்திய படத்திற்கான விருதை பெற்றுள்ளது.
soorarai pottru
இந்த நிலையில் காட்டுப் பயலே பாடல் யூட்யூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது . ஜீ.வி.பிரகாஷ் இசையில்உருவான இந்தப்பாடலுக்கான வரிகளை சினேகன் எழுத தீ(Dhee) இந்த பாடலை பாடியிருந்தார்..