ப்ரைம் வீடியோவில் சூது கவ்வும் 2! தியேட்டரில் சொதப்பிய படம் ஓடிடியில் தப்பிக்குமா?
சூது கவ்வும் படத்தின் தொடர்ச்சியான சூது கவ்வும் 2, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. சிவா நடிக்கும் இப்படத்தை எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் இருந்த நடிகர்கள் பலரும் இதிலும் நடித்துள்ளனர்.
Soodhu Kavvum 2 OTT Streaming
2013ஆம் ஆண்டு நலன் குமாரசாமியின் இயக்கத்தில் வெளியான வெற்றிப் படம் சூது கவ்வும். அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட சூது கவ்வும் 2 இப்போது OTT தளமான அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
Siva in Soodhu Kavvum 2
சூது கவ்வும் 2 படத்தை எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவா நாயகனாக நடித்துள்ளார். கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், யோக் ஜேபி மற்றும் ராதா ரவி ஆகியோர் முதல் பாகத்தில் நடித்த அதே பாத்திரங்களில் மீண்டும் நடிக்கின்றனர்.
Soodhu Kavvum 2 on Prime Video
ஹரிஷா, கராத்தே கார்த்தி, அருள்தாஸ், கல்கி, கவி இந்தப் படத்தில் ஆகியோரும் நடித்துள்ளனர். சூது கவ்வும் 2 படத்தின் கதையை எஸ்.ஜே.அர்ஜுன் மற்றும் டி.யோகராஜா இணைந்து எழுதியுள்ளனர்.
Soodhu Kavvum 2 OTT release
நாயகன் குருவின் வாழ்க்கையில் ஒரு தனிப்பட்ட சோகத்திற்கு காரணமான ஊழல் தொடர்பான கதையாக சூது கவ்வும் 2 உருவாகியுள்ளது. குரு முதல் பாகத்தில் கைவிட்ட தனது கடத்தல் தொழிலை மீண்டும் தொடர முடிவு செய்கிறார்.
Soodhu Kavvum 2 reviews
டிசம்பர் 13 அன்று தியேட்டர்களில் வெளியான படம் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. சூது கவ்வும் முதல் பாகத்தில் இருந்த சுவாரஸ்யம் இதில் இல்லை என்றும் திரைக்கதை சரியில்லை என்றும் சினிமா விமர்சகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.