MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஹாஸ்டல் பாத்ரூமில் ரகசிய கேமரா... 60 பெண்களின் குளியல் வீடியோ லீக் - நெட்டிசன்களுக்கு சோனுசூட் வைத்த கோரிக்கை

ஹாஸ்டல் பாத்ரூமில் ரகசிய கேமரா... 60 பெண்களின் குளியல் வீடியோ லீக் - நெட்டிசன்களுக்கு சோனுசூட் வைத்த கோரிக்கை

Sonu sood : சண்டிகர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், கல்லூரி விடுதியில் உள்ள பாத்ரூமில் ரகசியமாக கேமரா வைத்து, அங்கு குளிக்கும் பெண்களை வீடியோ பதிவு செய்து அதனை தனது காதலனுக்கு அனுப்பி வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Sep 18 2022, 02:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் அமைந்துள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். அதில் MBA முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், கல்லூரி விடுதியில் உள்ள பாத்ரூமில் ரகசியமாக கேமரா வைத்து, அங்கு குளிக்கும் பெண்களை வீடியோ பதிவு செய்து அதனை தனது காதலனுக்கு அனுப்பி வந்துள்ளார்.

24

பல நாட்களாக இந்த சம்பவம் அரங்கேறி வந்துள்ளது. இதுவரை 60க்கும் மேற்பட்ட பெண்களின் குளிக்கும் வீடியோவை படமாக்கி அதனை தனது காதலனுக்கு அனுப்பி வைத்துள்ளார் அந்த மாணவி. இந்த வீடியோக்கள் ஒவ்வொன்றாக சமூக வலைதளங்களில் லீக் ஆனதை பார்த்து சம்பந்தப்பட்ட மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையும் படியுங்கள்... நெட்டில் லீக்கான கல்லூரி மாணவிகளின் குளியல் வீடியோக்கள்.. போராட்டத்தில் குதித்த ஹாஸ்டல் மாணவிகள்.!!

34

இத்தகைய கேவலமான செயலில் ஈடுபட்ட மாணவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டமும் வெடித்துள்ளதால் சண்டிகரில் பரபரப்பு நிலவி வருகிறது. குளியல் வீடியோ பரவியதை அறிந்த சில மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வீடியோக்களை காதலனுக்கு அனுப்பிய மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

44

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் இந்த விவகாரம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. நாம் நம் சகோதரிகளுக்கு துணையாக நிற்க வேண்டிய நேரம் இது, அப்படி செய்தால் தான் சிறந்த முன்னுதாரனமாக இருக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் இது சோதனையான காலம் தான். பொறுப்புடன் இருங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்... கேரளாவில் நிழற்குடை சர்ச்சை: மடியில் அமர்ந்து போராட்டம் நடத்திய மாணவர்கள்: மேயர் ஆர்யா உறுதி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சோனு சூத்

Latest Videos
Recommended Stories
Recommended image1
‘டியூட்’ மமிதாவின் நடிப்பை பார்த்து வாயடைத்துப் போன ‘தாய் கிழவி’ ராதிகா..!
Recommended image2
தம்பிகளை பிளாக்மெயில் பண்ணி காரியத்தை முடித்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image3
கேரளத்து பைங்கிளி.. தமிழ் ரசிகர்களின் செல்லக் கிளி! - ரேஷ்மா முரளிதரன் மிரட்டல் பின்னணி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved