முகம் வீங்கியதற்கு இது தான் காரணம்...பணம் கேட்டு மிரட்டும் ரைசா..? மருத்துவர் பகீர் குற்றச்சாட்டு!
ஃபேசியல் செய்ய போன போது, மருத்துவர் வேறு விதமான சிகிச்சை தனக்கு செய்ததால், முகம் வீங்கி விட்டதாக... புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில் இதுகுறித்து மருத்துவர் பைரவி விளக்கம் கொடுத்துள்ளார்.
பிரபல மாடலான இவரை, தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமாகியது என்றால், அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும், இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த 'பியர் பிரேமா காதல்' இளம் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
கதைகளை நிதானமாக தேர்வு செய்து நடித்து வரும் இவர், சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களால் கவரப்பட்டு வைரலாகும் என்பதும் தெரிந்ததே
அந்த வகையில் ரைசா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் சமீபத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியடைய செய்தார்.
இந்த புகைப்படத்தில் ரைசா முகம் முகமெல்லாம் வீங்கி காணப்படுகிறது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறியபோது, ‘நேற்று எளிமையான ஃபேசியல் செய்வதற்காக அழகுக்கலை மருத்துவரிடம் சென்றேன். ஆனால் அங்கிருந்த அழகுக்கலை நிபுணர் என்னை வலுக்கட்டாயமாக வேறு சில அழகு செயல்முறைகளை எடுத்து கொள்ள கட்டாயப்படுத்தினார். அதனுடைய விளைவு தான் இது என்று தன்னுடைய முகமெல்லாம் வீங்கிய புகைப்படத்தை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் ரைசா முன் வைத்த புகாருக்கு, தோல் மருத்துவர் பார்கவி விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் ரைசா தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் கூறி அதிர வைத்துள்ளார்.
பொதுவாக இரு பக்கமும் சீரான அளவில் இல்லாத முக அமைப்பை சீர்செய்யும் Dermal Fillers என்ற சிகிச்சை முறை தான் ரைசாவுக்கு அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையை ஏற்கனவே ஒருமுறை ரைசா எடுத்துக் கொண்டார். அதனை தொடர்ந்து தான் தற்போது மீண்டும் அதே வகை சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை செய்து கொள்வதால் ஒரு வாரம் முகம் வீங்கி தான் இருக்கும்.
இதையே காரணமாக வைத்து, தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.