பேயாட்டம் ஆடிய ஃபெஞ்சல் புயல்! முதல் ஆளாக ஓடி வந்து நிவாரண நிதியை அள்ளிக்கொடுத்த சிவகார்த்திகேயன்!
ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் உள்ள பல பகுதிகள் தற்போது தண்ணீரில் மிதந்து வருகிறது. இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் முதல் ஆளாக ஓடி வந்து உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால், எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், தற்போது வரை பலர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டின் உள்ளேயே முடங்கி உள்ளனர். ஏராளமான வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் பூச்சி மற்றும் பாம்புகளின் அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.
அரசு சார்பில் இதுவரை மக்களுக்கு போதிய உதவி கிடைக்காத நிலையில், சமூக ஆர்வலர்கள் பலரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருவதை பார்க்க முடிகிறது. மேலும் கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, மாவட்டங்களைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 புயல் நிவாரணமாக வழங்க முதலமைச்சர். முக ஸ்டாலின் உத்தரவிட்டார்.
Fengal
அதேபோல் பல பகுதிகளில் தண்ணீர் இன்னும் குறையாத நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க... விவசாயிகள் பலர் தங்களுடைய நிலத்தில் பயிரிட்ட பயிர்கள் ஃபெஞ்சல் புயலால் அழிந்து விட்டதாகவும், ஆடு - மாடு மழை வெள்ளத்தில் சிக்கி இறந்ததாகவும் கண்ணீர் விட்டு வருகின்றனர். சிலர் வீடு, உடைமைகளை இழந்து தவித்து வரும் நிலையில்... அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Sivakarthikeyan
இந்நிலையில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதல் ஆளாக ஓடி வந்து உதவியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு சிவகார்த்திகேயன் பத்து லட்சத்திற்கான காசோலையை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சில பிரபலங்கள் ரூ.100 கோடி சம்பளம் வாங்கும் நிலையில், இதுவரை மக்களுக்கு எதுவும் உதவ முன் வராத நிலையில் சிவகார்த்திகேயன் உதவி கவனம் பெற்றுள்ளது.