- Home
- Cinema
- SK 20 movie :தனுஷை தொடர்ந்து டோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன்! பூஜையோடு தொடங்கியது SK 20 ஷூட்டிங்
SK 20 movie :தனுஷை தொடர்ந்து டோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன்! பூஜையோடு தொடங்கியது SK 20 ஷூட்டிங்
காரைக்குடியில் நடைபெற்ற SK 20 படத்தின் பூஜையில் சிவகார்த்திகேயன், இயக்குனர் அனுதீப், நடிகர் சத்யராஜ் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் (sivakarthikeyan). இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ‘டாக்டர்’ படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது இவர் கைவசம் டான், அயலான், சிங்கப்பாதை போன்ற படங்கள் உள்ளன. இதில் டான் மற்றும் அயலான் படங்களின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தற்போது தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை அனுதீப் (Anudeep) இயக்க உள்ளார். இவர் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற ‘ஜாதி ரத்னலு’ (jathi ratnalu) என்கிற படத்தை இயக்கியவர் ஆவார். சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இதுவாகும்.
சமீபத்தில் விஜய் (vijay), தனுஷ் (Dhanush) போன்ற முன்னணி தமிழ் நடிகர்கள் டோலிவுட் படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது சிவகார்த்திகேயனும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். தற்காலிகமாக SK 20 என அழைக்கப்படும் இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.
காரைக்குடியில் நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் சிவகார்த்திகேயன் (sivakarthikeyan), இயக்குனர் அனுதீப், நடிகர் சத்யராஜ் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்திருந்த சத்யராஜ், தற்போது 9 ஆண்டுகளுக்கு பின் அவருடன் மீண்டும் இணைந்துள்ளார்.
SK 20 படத்தின் கதைப்படி இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்ணை நாயகன் காதலித்து கரம்பிடிப்பதே மையக்கருவாம். இதனால் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகையை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அந்த நடிகை யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.