MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நடிகர் சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பிரின்ஸ்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் நாள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். 

1 Min read
Author : manimegalai a
Published : Aug 30 2022, 09:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் சிவகார்த்திகேயன் 'டான்' படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரின்ஸ், அயலான், ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் 'மாவீரன்' படத்தில் நடிக்கவும் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.  பிரின்ஸ் மற்றும் அயலான் ஆகிய படங்களின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், இரண்டு படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

24

அயலான் படம் குறித்து இதுவரை எந்த ஒரு அப்டேட்டும்  வெளியாகாத நிலையில், பிரின்ஸ் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் நாளை தற்போது படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்த பாடல் செப்டம்பர் 1 ஆம் தேதி, வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த பாடல், மற்றும் எத்தனை மணிக்கு வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்: இதை மட்டும் செய்யவே மாட்டேன்! இந்த காரணத்தால் திரையுலகை விட்டு விலக தயாரான நயன்? விக்கி மீது அவ்வளவு காதலா!
 

34
Sivakarthikeyan

Sivakarthikeyan

தமிழ், தெலுங்கு, என இரு மொழிகளில் உருவாகி வரும் 'பிரின்ஸ்' படத்தை அனு தீபக் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் உக்கிரனைச் செய்த நடிகை மரியா என்பவர் நாயகியாக நடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பிரின்ஸ்' படத்திற்கு முதல் முறையாக இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். சாந்தி டாக்கிஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. 

44

இந்த படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ள நிலையில், போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை, தமிழகத்தில் கோபுரம் நிறுவனம் விநியோகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக தமன் சிவகார்த்திகேயன் காம்பினேஷனில் உருவாகும் பாடல் எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு காத்திருக்கின்றனர் ரசிகர்கள் என்பது குறிபிடத்தக்கது.

மேலும் செய்திகள்: Cobra Review: விக்ரம் நடிப்பு விருதுகளை குவிக்கும்..! 'கோப்ரா' படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image2
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image3
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved