இது என்ன சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை? அதிரடியாக மாற்றப்பட்ட 'மாவீரன்' நியூ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மாவீரன்' திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'மாவீரன்'. இந்த படத்தை மண்டேலா படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், சுனில், யோகி பாபு, சரிதா, ஆகியோர் நடித்துள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, பரத் சங்கர் இசையமைத்துள்ளார். 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில், போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் இப்படம் ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி ரிலீசாகும் என ஏற்கனவே சில தகவல்கள் வெளியான நிலையில், பின்னர் ஒரு சில காரணங்களால் ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்கு இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
பிறந்தநாளில் காதல் சர்ச்சையில் சிக்கிய ஷிவானி! வைரலாகும் போட்டோஸ்!
Sivakarthikeyan
அந்த வகையில் சற்று முன்னர், சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மாவீரன்' திரைப்படம் ஜூலை மதம் 14 ஆம் தேதி, ரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படம் ரிலீஸ் ஆகவதால், தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் இப்படத்தின் தேதியை மாற்றினர். அதே போல் அடுத்தடுத்து சில பெரிய படங்கள் வருகையால் ஜூலை மதத்திற்கு இப்படம் தள்ளி போய் உள்ளது.
இது என்ன டா சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை என ஒரு தரப்பு ரசிகர்கள் கூறி வந்தாலும், மற்றொரு தரப்பினர்... லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்து... சரவெடி கிளம்புவார் சிவகார்த்திகேயன் என கூறி வருகிறார்கள்.
அட கடவுளே... நடிகை வனிதா விஜயகுமாருக்கு இப்படி ஒரு அரியவகை நோய் இருக்கா? அவரே கூறியதகவல் !