MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அதிகளவிலான தியேட்டர்களை தட்டித்தூக்கிய சர்தார்... தீபாவளி ரேஸில் பின்னுக்கு தள்ளப்பட்ட பிரின்ஸ் - காரணம் என்ன?

அதிகளவிலான தியேட்டர்களை தட்டித்தூக்கிய சர்தார்... தீபாவளி ரேஸில் பின்னுக்கு தள்ளப்பட்ட பிரின்ஸ் - காரணம் என்ன?

கார்த்தியின் சர்தார் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும், அதேபோல் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 

2 Min read
Author : Ganesh A
Published : Oct 19 2022, 02:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

தீபாவளி என்றாலே புதுப்படங்கள் ரிலீசாவது வழக்கம். அதிலும் நிச்சயம் அஜித், விஜய், ரஜினி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ஏதாவது ஒன்று ரிலீசாகிவிடும். ஆனால் இந்த வருட தீபாவளி சற்று வித்தியாசமானதாக அமைந்துள்ளது. ஏனெனில் மேற்கண்ட முன்னணி நடிகர்களின் படங்கள் ஒன்று கூட இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகவில்லை.

அவர்களுக்கு பதிலாக தற்போது தமிழ் சினிமாவில் வெற்றிநடைபோட்டு கொண்டிருக்கும் நடிகர்களான சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி ஆகியோரின் திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்ள உள்ளனர். அதன்படி சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படமும் கார்த்தி நடித்துள்ள சர்தார் படமும் வருகிற அக்டோபர் 21-ந் தேதி ரிலீசாக உள்ளது.

23

இவர்கள் இருவரது படங்கள் ஒரே நாளில் மோதிக்கொள்வது இது முதல்முறை அல்ல, இதற்கு முன் கடந்த 2019-ம் ஆண்டு சிவகார்த்திகேயனின் ஹீரோ படமும், கார்த்தி நடித்த தம்பி படமும் கிறிஸ்துமஸ் விடுமுறையில் நேருக்கு நேர் மோதின. ஆனால் இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இதையும் படியுங்கள்...  கோலிவுட் டூ பாலிவுட்.. தீபாவளிக்கு திரையரங்குகளில் பட்டாசாய் பட்டைய கிளப்ப காத்திருக்கும் படங்களின் லிஸ்ட் இதோ

ஆனால் இம்முறை இருவரும் வெற்றிபெறும் முனைப்போடு களமிறங்கி உள்ளனர். ஏனெனில் இவர் இருவரும் இதற்கு முன்னர் நடித்த இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. அதனால் இந்தமுறையும் வெற்றிகண்டு ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்பில் இருவரும் களமிறங்கி உள்ளனர்.

33

இதில் சர்தார் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. அதேபோல் பிரின்ஸ் படத்தை மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இதில் யார் அதிக தியேட்டர்களை பிடிக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போதைய தகவல்படி சர்தார் படத்துக்கு தான் அதிக அளவிலான தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாம்.

பிரின்ஸ் படத்திற்கும் 600 தியேட்டர்கள் வரை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தாலும், சர்தார் படத்தோடு ஒப்பிடுகையில் இது குறைவான அளவு தான் என கூறப்படுகிறது. சர்தார் படத்திற்கு அதிக அளவிலான தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு உதயநிதி தான் முக்கிய காரணம் என சொல்கிறார்கள். இதுதவிர பொன்னியின் செல்வன் ஓடி வரும் தியேட்டர்களையும் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ரெட் ஜெயண்ட் இறங்கி உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதனால் தீபாவளி ரேஸில் தற்போதைய நிலவரப்படி சர்தார் தான் முன்னிலை வகிக்கிறது.

இதையும் படியுங்கள்... 44 வயதிலும் பிட்னஸில் சூர்யாவுக்கே டஃப் கொடுக்கும் ஜோதிகா... வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ வைரல்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
திருமணத்தை மீறிய உறவை தட்டிக்கேட்டதால் தண்டனை அனுபவிக்கிறேன் : மன வேதனையுடன் விவாகரத்து கோரிய சங்கீதா விஜய்!
Recommended image2
Now Playing
ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் ! நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
Recommended image3
விஜய்க்கு 'அந்த' நடிகையுடன் தொடர்பு.. வெளிப்படையாக போட்டுடைத்த மனைவி சங்கீதா.. மனுவில் பரபரப்பு தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved