- Home
- Cinema
- ஜெயிலரில் தரமான சம்பவம் செய்ய தயாரான சிவகார்த்திகேயன்! ரஜினி தந்த திடீர் வாய்ப்பால் திக்குமுக்காடிபோன எஸ்.கே.!
ஜெயிலரில் தரமான சம்பவம் செய்ய தயாரான சிவகார்த்திகேயன்! ரஜினி தந்த திடீர் வாய்ப்பால் திக்குமுக்காடிபோன எஸ்.கே.!
ரஜினியின் ஜெயிலர் படத்துக்கான அறிவிப்பு வெளியானபோது அப்படத்தில் சிவகார்த்திகேயன் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வந்தன.

நடிகர் ரஜினி நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் தயாராகி வருகிறது. நெல்சன் இயக்கி வரும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். மேலும் கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இதுதவிர வஸந்த் ரவி, யோகிபாபு, பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், நடிகை தமன்னா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல் பதிவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நெல்சன் - அனிருத் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் என்றால் அதில் சிவகார்த்திகேயனின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். அதன்படி கோலமாவு கோகிலா திரைப்படத்தில் கல்யாண வயசு பாடலை எழுதிய சிவா, அடுத்ததாக நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தில் ஹீரோவாக நடித்ததோடு மட்டுமின்றி செல்லம்மா பாடல் வரிகளையும் எழுதி இருந்தார்.
இதையும் படியுங்கள்... அஜித் கைவிட்டாலும்... விக்னேஷ் சிவனை கைவிடாத ‘விஜய்’ நடிகர்..! விக்கியின் அடுத்த பட ஹீரோ இவரா?
நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படி தொடர்ந்து நெல்சன் படத்துக்கு பாடல் எழுதி வரும் சிவகார்த்திகேயன், தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி ஜெயிலர் படத்துக்கும் பாடல் வரிகளை எழுத உள்ளாராம்.
முதலில் ஜெயிலர் படத்துக்கான அறிவிப்பு வெளியானபோது அப்படத்தில் சிவகார்த்திகேயன் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வந்தன. ஆனால் அது வதந்தி என்பது பின்னர் தெரியவந்தது. ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன், முதன்முறையாக அவரது படத்துக்கு பாடல்கள் எழுத உள்ளதால் அந்த பாடல் எப்படி இருக்கும் என்பதை கேட்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். சிவகார்த்திகேயன் எந்த படத்துக்கு பாடல் எழுதினாலும், அதன்மூலம் வரும் சம்பளத்தை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் குடும்பத்துக்கு வழங்கி வருகிறார். அதேபோல் இந்த ஜெயிலர் படத்தின் மூலம் வரும் வருமானத்தையும் அவர் அவ்வாறே வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... உலகம் சுற்றும் வாலிபனாக வலம் வரும் அஜித் - வைரலாகும் ஏகே-வின் டூர் போட்டோஸ் மற்றும் வீடியோ
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.