ஜன நாயகனுக்கு போட்டியா? எஸ்கேப் ஆன எஸ்கே: பராசக்தி ரிலீஸ் தேதியை அறிவித்த மூவி டீம்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வீடியோ வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி படம் எப்போது திரைக்கு வருகிறது தெரியுமா?

சிவகார்த்திகேயன் பராசக்தி பட ரிலீஸ் தேதி
காமெடி ஹீரோவாக வலம் வந்த சிவகார்த்திகேயனுக்கு ஆக்ஷன் ஹீரோவாக அந்தஸ்து கொடுத்த படம் அமரன். அதுமட்டுமினிறி கோலிவுட்டில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் கொடுத்த நடிகர்களின் பட்டியலிலும் சிவகார்த்திகேயன் இடம் பிடித்தார். இந்தப் படத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்திற்கு பிறகு இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வெளியான படம் தான் மதராஸி. அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் கடந்த 5ஆம் தேதி வெளியான நிலையில் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை.
முதல் முறையாக காதல் கதையை வெளிப்படையாக சொன்ன நடிகை ஷ்ரேயா சரண்; மிராய் பட புரோமோஷன்!
பராசக்தி ஜனவரி 14 ரிலீஸ்
மதராஸி வெளியாகி ஒரு வாரம் அதாவது 7 நாட்கள் ஆன நிலையில் இந்த படம் இந்தியளவில் ரூ.49.02 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. முதல் நாளில் ரூ.13.65 கோடி, 2ஆவது நாளில் 12.1 கோடி, 3ஆவது நாளில் ரூ.11.4 கோடி, 4ஆவது நாளில் ரூ.4.15 கோடி, 5ஆவது நாளில் ரூ.3.2 கோடி, 6ஆவது நாளில் ரூ.2.5 கோடி, 7ஆவது நாளில் ரூ.2.02 கோடி என்று மொத்தமாக ரூ.49.02 கோடி மட்டுமே வசூல் குவித்துள்ளது. இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயனின் அமரன் படமே முதல் வாரத்தில் ரூ.114.85 கோடி வசூல் குவித்தது. ஆனால், இந்தப் படத்திற்கு பிறகு அதிக வசூல் குவித்த 2ஆவது படம் என்ற சாதனையை மதராஸி படைத்துள்ளது. 3ஆவது இடத்தில் டான் படம் இடம் பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன் பராசக்தி ரிலீஸ் தேதி
அமரன் கொடுத்த சூப்பர் டூப்பர் ஹிட்டுக்கு பிறகு அவரது நடிப்பில் உருவாகி வரும் படம் தான் பராசக்தி. முழுக்க முழுக்க ஹிந்தி எதிர்ப்பு போராட்ட கதையை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி வருகிறார். பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அதர்வா, ஸ்ரீ லீலா, ரவி மோகன், அப்பாஸ், ராணா டகுபதி, ப்ரித்வி ராஜன் என்று பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
5 வருஷமோ, 10 வருஷமோ – கண்ணீர் விட்டு கதறி அழும் மாரி; குமரவேல் ஜெயிலுக்கு போவது உறுதியா?
பராசக்தி ரிலீஸ் தேதி
ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ரூ.250 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இந்தப் படம் வரும் 2026 ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பராசக்தி வீடியோ
இது தொடர்பான வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே தளபதி விஜய்யின் ஜன நாயகன் படம் வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்போது ஒரு வாரம் 5 நாட்களுக்கு பிறகு பராசக்தி படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சூரரைப் போற்று படத்திற்கு பிறகு சுதா கொங்கரா இயக்கிய படம் என்பதால் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.